by admin on | 2025-11-18 09:00 AM
நவம்பர் 18 கப்பலோட்டிய தமிழன், செக்கிழுத்த செம்மல், தென்னாட்டு திலகர், வழக்கறிஞர் ஐயா வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்களின் 89-வது குருபூஜை விழா இந்நாளில் நமது ஐயாவின் மிகப்பெரிய தியாகத்தையும் வீரத்தையும் என்றும் போற்றி வணங்குவோம்....
உலகிலேயே 40 வருஷம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ஒரே தலைவர் வ.உ.சிதம்பரம்..!
அதிலும் கோவை சிறைதான், வஉசிக்குள் பெருமளவில் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது..!
அந்த ஜெயிலர் பெயர் மிஞ்ஜேல்... ரொம்ப மோசமானவன். கொடூரக்காரன்..!
ஜெயிலுக்குள் கொண்டு செல்லும்போதே, கை, கால்களைகட்டி தெருவெல்லாம் இழுத்து சென்றுள்ளனர்..!வஉசிக்கு சிறைக்குள் தனி ரூம். ஆனால் அதில் காற்று வசதி இல்லை. சுத்தமும் சுகாதாரமும் இல்லை. கால்களில் விலங்கு பூட்டப்பட்டுதான் வஉசியை அடைத்துவைத்தனர்..!ஜெயிலுக்குள் சென்றதுமே தலையை மொட்டை அடித்திருக்கிறார்கள். ஒரே ஒரு டிரஸ் தந்திருக்கிறார்கள், அதுகூட சாக்குப் பையால் தைத்தது. ஒருநாளைக்கு ஆயிரம் பேருக்கு சாப்பாடு போட்டவருக்கு, ஜெயிலில் கூழ் தந்தார்கள். அதுவும் புளித்து போயிருந்தது. சில சமயம் அந்த கூழில் புழுக்கள் மிதக்குமாம்..!உடல்நிலை மோசமானதால், ஒருநாள் மட்டும் அரசி சோறு கேட்டாராம் வஉசி. அதற்காக 3 நாளைக்கு, அந்த கூழை கூட தராமல் பட்டினி போட்டுள்ளான் அந்த ஜெயிலர் மிஞ்ஜேல்.
சணல் கிழிக்கும் மிஷினை கையாலேயே சுற்ற வேண்டும். இதுதான் வஉசிக்கு தரப்பட்ட முதல் வேலை. அப்படி செய்ததால், வஉசியின் கைகளில் உள்ள தோல் கிழிந்து ரத்தம் கொட்டி உள்ளது. அதை பார்த்து ஒரு கைதி, மனசு கேட்காமல் ஓடிவந்து மிஷின் சுற்றுவதை தடுத்துள்ளார்.
ஆனால் அந்த கைதியை அடித்து நொறுக்கினான் மிஞ்ஜேல்... பிறகு, கையால் செய்யும் வேலைகளை தராமல், செக்கிழுக்கும் வேலையை தந்துள்ளனர். அதாவது மாட்டுக்கு பதில் வஉசியை பூட்டினர். அதுவும் உச்சிவெயிலில். இதில் மயங்கி கீழே விழுந்துவிட்டால், சவுக்காலேயே அடிப்பார்கள்..!வஉசியின் மதிப்பு தெரிந்த கைதி ஒருவர், தன்னுடைய தலைக்கு மேல் 2 கைகளையும் கூப்பி "வணக்கம் ஐயா" என்றார். அவ்வளவுதான், ஜெயிலுக்குள் கலவரம் வெடித்து, ஒரு கைதி துப்பாக்கி சூட்டில் இறக்குமளவுக்கு பிரச்சனை செய்துவிட்டான் அந்த ஜெயிலர்.
வஉசி விடுதலை செய்யப்பட்டும் தன்னுடைய வக்கீல் பணியை தொடர முடியாத அளவுக்கு லைசென்ஸ் பிடுங்கிவிட்டனர். ஒரு அரிசி கடையில் வேலை பார்த்தார். நாள் முழுக்க வேலை பார்த்துவிட்டு, 4 ஆழாக்கு அரிசியோடு வீட்டுக்கு போவாராம். இந்த விஷயம் தெரிந்த அந்த மளிகைக் கடைக்கு சீல் வைத்து விட்டனர் பிரிட்டிஷ் அதிகாரிகள்..!
அரை வயிற்று கஞ்சிக்குகூட கஷ்டப்படும் நிலை வந்ததால்தான், தலையில் மண்ணெண்ணெய் சுமந்து விற்றுள்ளார்...! இதைவிட கொடுமை, தன்னுடைய வக்கீல் உரிமத்தை மீட்டெடுக்க கோர்ட்டில் வாதாடி உதவ வேண்டும் என்று வஉசி கேட்டதற்கு, மூத்த வக்கீலான மூதறிஞர் ராஜாஜி மறுத்துவிட்டாராம்.சில சமயம் காந்தியை விட்டுத்தராமலும், சில சமயம் காந்தியின் கொள்கைகளை ஏற்க முடியாமலும் எதிர்த்துள்ளார் வஉசி..!வஉசி குடும்பம் வறுமையில் உள்ளதை கேள்விப்பட்டு, தென் ஆப்பிரிக்காவில் உள்ள தமிழர்கள், 5000 ரூபாய் நிதி திரட்டி காந்தியிடம் தந்திருக்கிறார்கள். "எப்படியாவது வஉசியிடம் இந்த பணத்தை சேர்த்துவிடுங்கள்" என்றும் சொல்லி உள்ளனர். லெட்டர் மேல் லெட்டர் போட்டும் காந்திக்கு ஞாபகப்படுத்தி கொண்டே இருந்தனர்..!
ஆனால் அந்த பணத்தை காந்தி, வஉசிக்கு தரவே இல்லையாம். "காந்தி கணக்கு" என்று நாம் சொல்கிறோமே. அது இதுதான்! (திலகர், இந்த விஷயத்தில் தலையிட்டு பஞ்சாயத்து செய்து, அந்த பணத்தை வஉசிக்கு பெற்று தந்தது தனி கதை)
வஉசி போல் ஒரு தியாகி போர்க்குணமுள்ள ஒரு தேசபக்தர் கிடைத்தது இந்தியாவின் பாக்கியம் ஆனாலும் சொந்த கட்சியில் உரிய மரியாதையை, அவர் இறந்தும்கூட தராதது வருந்தத்தக்கது. சில வழக்குகளை எதிர் கொள்வதற்கும் கூட அவருக்கு காங்கிரஸ் உதவவில்லை என்பது கசப்பான உண்மை..!உண்மையை சொல்வதானால், பிரிட்டிஷ் அரசின் ஒடுக்குமுறைக்கு ஆளாகி சீரழிந்ததைவிட, சொந்த கட்சியின் துரோகத்தால்தான் அதிகம் துவண்டுபோனார் வஉசி..!
பல்லாண்டு காலமாய் அடிமைப்படுத்தியிருந்த வெள்ளையர்களுக்கு எதிராகக் கப்பல் விட்ட பெருமை இந்தியாவிலேயே தமிழன் வஉசிக்குதான் உண்டு..!இனியாவது "வஉசி கப்பல் ஓட்டினார், செக்கிழுத்தார்" என்பதை மட்டுமே சொல்லி சுருக்கிவிடாமல், அவருடைய சமூக நீதி கொள்கையை மக்களிடையே, இன்றைய இளைஞர்கள் அழுத்தமாக பரப்ப செய்ய வேண்டும்..!
தமிழர்களை மட்டுப்படுத்தவும், ஏளனப்படுத்தவும், யாருக்குமே தகுதி கிடையாது என்பதையும் செவிப்பறையில் ஓங்கி அறைந்து சொல்ல வேண்டும்..!இந்திய சுதந்திரப் போராட்டத்தையும், அதற்காக தன்னுடைய வாழ்க்கையையும் உயிரையும் தியாகம் செய்த தியாகிகளை நன்றியோடு நினைவு கொள்வோம்.வ. உ. சி.அவர்கள் நமக்காக பெற்று தந்த நாட்டின் சுதந்திர வரலாறு
நம் வருங்கால சந்ததிகளுக்கு தெரியப்படுத்தவும்
மிக்க நன்றி!!
நன்றி. தகவல்- Kolanjiappa pondian
டி முத்து காமாட்சி எவிடன்ஸ் வெளியீட்டாளர். 9842337544
இந்தியத் திருநாட்டின் விடுதலைக்காக ஆங்கிலேயரை எதிர்த்து எழுச்சிமிகு உரைகளை ஆற்றியதற்காகவும், ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக தூத்துக்குடி மற்றும் கொலம்போவிற்கு இடையே கப்பல் சேவை துவக்கியதற்காகவும் இரட்டை ஆயுள தண்டனைப் பெற்று பல துன்பங்களை சிறைச்சாலையில் அனுபவித்தவரும், தமிழறிஞர், தலைசிறந்த வழக்கறிஞர், தொழிற்சங்கத் தலைவர், சுதந்திரப் போராட்ட வீரர் என பன்முகத் தன்மை கொண்டவரும், ‘செக்கிழுத்தச் செம்மல்’ ‘கப்பலோட்டிய தமிழர்’ ‘தென்னாட்டுத் திலகர்’ என தமிழக மக்களால் இன்றளவிலும் அன்போடு அழைக்கப்படுபவருமான திரு. வ.உ. சிதம்பரனார் அவர்களின் நினைவு நாளினை முன்னிட்டு அவருக்கு எனது வீர வணக்கத்தினையும், அஞ்சலியையும்
செலுத்துகிறேன்.
எவ்வித எதிர்பார்ப்புமின்றி தன்னுடைய வாழ்க்கையையே இந்தியத் திருநாட்டின் விடுதலைக்காக அர்ப்பணித்த திரு. வ.உ. சிதம்பரனார் அவர்களின் தியாகங்கள் இப்பூமி உள்ளவரை என்றென்றும் நிலைத்து நிற்கும்.
SC/ST மக்களுக்கு இட ஒதுக்கீடு குறித்து பத்திரிக்கையாளர் கார்த்திக் சங்கர் விளக்கம்....!!!!"
பறவை காய்ச்சல் எதிரொலி - காகங்கள் இறப்பு -அரசு எச்சரிக்கை - பொதுமக்களே உஷார் !
கொரியன் லவ் கேம் - 3 சகோதரிகள் தற்கொலை - அதிர்ச்சி தகவல் - பெற்றோர்களே உஷார் !!
பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்படுமா? கார்த்திக்சங்கர் கேள்வி...???
குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை ...!!! தென் மண்டல காவல்துறை தலைவர் பாராட்டு