by Vignesh Perumal on | 2025-11-17 01:16 PM
திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை சார்பதிவாளர் அலுவலகத்தில் நடைபெறும் லஞ்ச ஊழல்களைக் கண்டித்தும், இது தொடர்பாகப் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காத லஞ்ச ஒழிப்புத் துறையைக் கேள்வி கேட்டும், அப்பகுதியில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வடமதுரை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ள இந்தப் போஸ்டர்கள், "வடமதுரை அக்கப்போர் இயக்கம்" என்ற பெயரில் வெளியிடப்பட்டுள்ளன. வடமதுரை சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு உள்ளிட்ட பணிகளுக்காக லஞ்சம் கேட்கப்படுவதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. பாதிக்கப்பட்ட பொதுமக்கள் பலர், இந்தப் புகார்களை திண்டுக்கல் மற்றும் சென்னை லஞ்ச ஒழிப்புத் துறைக்கு நேரடியாகக் கடிதங்கள் மூலமாகவும், தொலைபேசி வாயிலாகவும் அனுப்பியும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
நடவடிக்கை எடுக்காத லஞ்ச ஒழிப்புத் துறையின் செயல்பாட்டைக் கடுமையாக விமர்சித்து, "லஞ்ச ஒழிப்பு துறை தூங்குகிறதா..?" என்று போஸ்டரில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
பொதுமக்கள் பலர் சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்சத் தொகையைக் கொடுத்து அலுவல் பணிகளை மேற்கொள்ள வேண்டியிருப்பதால், அதிருப்தியடைந்த சில சமூக ஆர்வலர்கள் இந்த சுவரொட்டிகளை ஒட்டி தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.
இந்தச் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டதன் மூலம், லஞ்ச ஒழிப்புத் துறை இந்தப் புகாரை உடனடியாகக் கவனத்தில் எடுத்துக்கொண்டு, வடமதுரை சார்பதிவாளர் அலுவலகத்தில் நடைபெறும் லஞ்ச ஊழல்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
நிர்வாக ஆசிரியர் - பா.விக்னேஷ்பெருமாள்
மனைவியிடம் ஆபாச பேச்சு - அடங்காத ஆத்திரம் ! 5 ஆண்டுகள் கழித்து பழி தீர்த்த கொடூரம் !! சில மணிகளில் தூக்கிய போலீஸ் !!!
இன்ஸ்பெக்டருக்கு அரிவாள் வெட்டு ! சுட்டுப் பிடித்த போலீஸ் !!
அரசு ஊழியர்களுக்கு ஆப்பு ! த வெ க அரசு அதிரடி !!
ATM மையங்களில் கைவரிசை காட்டிய இளம் பெண் கைது! ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலீஸ் !!
மெகா போக்குவரத்து மாற்றம் - வாகன ஓட்டிகளே உஷார் !!