| | | | | | | | | | | | | | | | | | |
மாவட்டம் Dindigul

திண்டுக்கல்லில் பரபரப்பு...! கலெக்டர் அலுவலகம் முன்...! தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பு கண்டன ஆர்ப்பாட்டம்..!

by Vignesh Perumal on | 2025-11-17 12:07 PM

Share:


திண்டுக்கல்லில் பரபரப்பு...! கலெக்டர் அலுவலகம் முன்...! தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பு கண்டன ஆர்ப்பாட்டம்..!

தங்களை பட்டியல் இனத்தில் (SC) இருந்து வெளியேற்றி, தேவேந்திரகுல வேளாளர் எனப் பொதுப் பிரிவில் இணைக்கக் கோரும் விவகாரத்தில், உரிய அறிக்கையை மத்திய அரசுக்கு அனுப்ப மறுக்கும் தமிழ்நாடு அரசைக் கண்டித்து, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தேவேந்திரகுல வேளாளர் இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் இன்று (நவம்பர் 17, 2025) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தைச் சேர்ந்த மக்கள், கடந்த பல ஆண்டுகளாக, தங்களது சமூக அடையாளத்தை மேம்படுத்தும் நோக்கில், பட்டியல் பிரிவில் இருக்கும் பள்ளர், குடும்பன், காலாடி, பண்ணாடி, கடையன், தேவேந்திரகுலத்தான், வாதிரியார் ஆகிய 7 உட்பிரிவுகளை ஒன்றிணைத்து, ஒரே பெயரான 'தேவேந்திரகுல வேளாளர்' என்று அழைக்க வேண்டும் என்று கோரி வந்தனர்.

மத்திய அரசு, இந்தப் பெயர் மாற்றக் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு, ஏழு உட்பிரிவுகளையும் ஒன்றிணைத்து 'தேவேந்திரகுல வேளாளர்' என அழைக்கும் சட்ட மசோதாவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது.

ஆனால், இந்தச் சமூகத்தின் முக்கிய கோரிக்கையான, இந்தச் சமூக மக்களை தாழ்த்தப்பட்டோர் பட்டியல் (SC) பிரிவில் இருந்து முழுமையாக வெளியேற்றி, பிற்படுத்தப்பட்ட அல்லது பொதுப் பிரிவில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கையை மத்திய மற்றும் மாநில அரசுகள் இதுவரை நிறைவேற்றவில்லை.

இந்தப் பட்டியல் வெளியேற்றமே தங்களது சமூகத்தின் சுயமரியாதை மற்றும் வரலாற்று அடையாளம் காக்கப்படும் நடவடிக்கை என்று இந்தக் கூட்டமைப்பினர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

தற்போது, தங்களை பட்டியல் வெளியேற்றம் செய்ய மத்திய அரசுக்கு உரிய பரிந்துரை அல்லது ஆய்வு அறிக்கையை அனுப்பி வைக்காமல், தமிழ்நாடு அரசு தாமதம் செய்வதாகக் கூறி, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அனைத்து தேவேந்திரகுல வேளாளர் இயக்கங்களின் கூட்டமைப்பு, திண்டுக்கல் மாவட்டம் சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பட்டியல் பிரிவில் இருந்து தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தை வெளியேற்ற மறுத்து, மத்திய அரசுக்கு அறிக்கை தர தாமதிக்கும் தமிழக அரசைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இந்த ஆர்ப்பாட்டத்தின் மூலம், பட்டியல் வெளியேற்றக் கோரிக்கையை நிறைவேற்ற தமிழ்நாடு அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து, மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்ய வேண்டும் என்று கூட்டமைப்பினர் வலியுறுத்தினர்.

இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த தேவேந்திரகுல வேளாளர் இயக்கங்களைச் சார்ந்த தலைவர்கள், நிர்வாகிகள் மற்றும் திரளான பொதுமக்கள் கலந்துகொண்டு, கோரிக்கையை வலியுறுத்திப் பேசினர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் தங்கள் கோரிக்கை அடங்கிய மனுவை மாவட்ட ஆட்சியரிடம் சமர்ப்பித்தனர்.










செய்தி - மோகன் கணேஷ் திண்டுக்கல்.

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment