| | | | | | | | | | | | | | | | | | |
மாவட்டம் Theni District

தேனியில் தேசிய நூலக வார விழா...! வாசிப்பின் அவசியம்...! வல்லுநர்களின் கருத்து..!

by Vignesh Perumal on | 2025-11-17 11:45 AM

Share:


தேனியில் தேசிய நூலக வார விழா...! வாசிப்பின் அவசியம்...! வல்லுநர்களின் கருத்து..!

தேனி மாவட்ட மைய நூலகத்தில் 58-வது தேசிய நூலக வார விழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்வில் புத்தக வாசிப்பு, நூலகப் பயன்பாடு மற்றும் வாசிப்பின் அவசியம் குறித்து பல்வேறு அறிஞர்கள் சிறப்புரை ஆற்றினர்.

தேனி மாவட்ட மைய நூலகத்தில் நடைபெற்ற தேசிய நூலக வார விழாவிற்கு, நூலகர் விஜய் மூர்த்தி அனைவரையும் வரவேற்றுப் பேசினார். இந்நிகழ்வின் ஒருங்கிணைப்புப் பணிகளை கடமலைக்குண்டு நூலகர் ராஜசேகரன் மேற்கொண்டார். சின்னமனூர் நூலக வாசகர் வட்டத் தலைவர் மனோகரன் முன்னிலை வகித்தார்.

இந்த விழாவில், வாசிப்பின் முக்கியத்துவம் மற்றும் நூலகத்தின் வரலாறு குறித்துப் பலரும் வாசகர்களுக்கு எடுத்துரைத்தனர். புத்தக வாசிப்பு மற்றும் வாசிப்பின் அவசியம் குறித்து தலைமை ஆசிரியர் மற்றும் எழுத்தாளர் ஜெ. ராஜாராம் பாண்டியன் சிறப்புரையாற்றினார்.

நூலகப் பயன்பாட்டை வலியுறுத்திப் பேராசிரியர் தமிழ்ச்செல்வி பேசினார். வாசகர் வட்ட உறுப்பினர் முரளிதரன் தனது கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார். தமிழ் பேராசிரியர் பாலகிருஷ்ணன் வாசிப்பின் ஆழம் குறித்து விளக்கினார். த.மு.எ.ச. மாவட்டத் தலைவர் திருமதி. ராஜிலா ரிஸ்வான் நூலகம் குறித்த தனது கருத்துக்களை வாசகர்களுக்கு எடுத்துரைத்தார்.

இந்நிகழ்வின்போது, தலைமை ஆசிரியர் எழுத்தாளர் ஜெ. ராஜாராம் பாண்டியன் அவர்கள், மாவட்ட மைய நூலகத்தில் ஐயாயிரம் ரூபாய் (₹5,000) தொகையைச் செலுத்தி பெரும் புரவலராக தன்னை இணைத்துக் கொண்டார். அவரது இந்தச் செயல், வாசிப்புத் தளத்திற்கு அவர் அளித்த அங்கீகாரமாகப் பாராட்டப்பட்டது.


இந்தச் சிறப்புமிகு நிகழ்வில், மாவட்ட மைய நூலகர் திருமதி மாலதி உள்ளிட்ட நூலகர்கள் கவிதா, ரேவதி, விஜயலட்சுமி, கவிதா, மாசிலாமணி, செந்தில்குமரன் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும், வாசகர்கள், போட்டித் தேர்வு மாணவர்கள் என ஏராளமானோர் ஆர்வத்துடன் பங்கேற்றுப் பயனடைந்தனர்.

நிகழ்வின் நிறைவில், கலந்துகொண்ட அனைவருக்கும் நூலகர் ஆ. சவட முத்து நன்றி தெரிவித்தார்.









நிர்வாக ஆசிரியர் - பா.விக்னேஷ்பெருமாள் 

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment