by aadhavan on | 2025-11-16 01:22 PM
வ.உ.சிதம்பரனார் நினைவு நாள், குருபூஜை விழாவுக்கான அணையா ஆத்ம ஜோதி ஓட்டம் மதுரையில் இருந்து தொடங்கியது.
கப்பலோட்டிய தமிழர், சுதந்திரப் போராட்ட வீரர் வ.உ.சிதம்பரத்தின் 89வது நினைவு நாள், நாளை நவம்பர் 18ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. அவர் பிறந்த தூத்துக்குடி ஓட்டப்பிடாரத்தில், அனைத்திந்திய முதலியார் பிள்ளைமார் அமைப்பு (எய்ம்பா) சார்பில் குருபூஜை விழா நடக்கிறது.
இதற்காக வ.உ.சி.,யின் அணையா ஆத்ம ஜோதி ஓட்டம் மதுரை சிம்மக்கல்லில் உள்ள வ.உ.சி., சிலை வளாகத்தில் இருந்து கிளம்பியது. அனைத்திந்திய முதலியார் பிள்ளைமார் அமைப்பின் தலைவர் ஓம்சக்தி ஆர்.ராமச்சந்திரன், செயலாளர் ஆர்.எஸ்.கே. ரகுராம், மதுரை மாவட்ட தலைவர் ராமச்சந்திர குமார் நிகழ்வுக்கு தலைமை வகித்தனர். நிர்வாகிகள் சிவன், சற்குணசேகரன், நித்தியகுமார், பாக்கியநாதன், ஆதவன், பரிமளநாதன், ஞானசேகரன், பிரகல்யா உள்பட மாநில, மண்டல, மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
வ.உ.சிதம்பரம் பிள்ளையின் மகன் வழிப்பேரன் சிதம்பரம் வாலேஸ்வரன், ஜோதி ஓட்டத்தைத் தொடங்கி வைத்தார். ஜோதிக்கு முன்பாக கிழக்கிந்திய கம்பெனியை எதிர்த்து வ.உ.சிதம்பரம், சுதேசி கப்பல்கள் இயக்கியது, அவர் மீது வழக்குப்பதிவு செய்த பிரிட்டிஷ் அரசாங்கம் சிறையில் அடைத்து செக்கிழுக்க வைத்தது, பாரதியார், சுப்பிரமணிய சிவா உள்ளிட்ட தேச தலைவர்களுக்கும் அவருக்கும் இருந்த நட்பு உட்பட அவரது சுதந்திரப் போராட்ட வாழ்க்கையை வெளிப்படுத்தும் காணொளி காட்சி ஒளிபரப்பு வாகனமும் செல்கிறது.
இந்த ஜோதியானது மதுரை, விருதுநகர், தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள பல்வேறு நகரங்கள், கிராமங்கள் வழியாக திருநெல்வேலிக்கு கொண்டு சேர்க்கப்பட உள்ளது.
••••••••
மனைவியிடம் ஆபாச பேச்சு - அடங்காத ஆத்திரம் ! 5 ஆண்டுகள் கழித்து பழி தீர்த்த கொடூரம் !! சில மணிகளில் தூக்கிய போலீஸ் !!!
இன்ஸ்பெக்டருக்கு அரிவாள் வெட்டு ! சுட்டுப் பிடித்த போலீஸ் !!
அரசு ஊழியர்களுக்கு ஆப்பு ! த வெ க அரசு அதிரடி !!
ATM மையங்களில் கைவரிசை காட்டிய இளம் பெண் கைது! ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலீஸ் !!
மெகா போக்குவரத்து மாற்றம் - வாகன ஓட்டிகளே உஷார் !!