by aadhavan on | 2025-11-06 06:27 PM
அனைத்திந்திய முதலியார் பிள்ளைமார் சங்க தலைவர் ஓம் சக்தி ராமச்சந்திரன், அமைப்புச் செயலாளர் வேலம்மாள் உள்ளிட்ட நிர்வாகிகள் பூமி பூஜை செய்து பந்தல்கால் நட்ட போது எடுத்த படம். உடன் மாநில, மண்டல, மாவட்ட நிர்வாகிகள் உள்ளனர்.
தூத்துக்குடி : கப்பலோட்டிய தமிழர், சுதந்திரப் போராட்ட தியாகி, வழக்கறிஞர் வ.உ.சிதம்பரம் பிள்ளை நினைவு நாள், குருபூஜை விழாவாக ஓட்டப்பிடாரத்தில் கொண்டாடப்பட உள்ளதாக, 'எய்ம்பா' அமைப்பின் தலைவர் 'ஓம் சக்தி' ராமச்சந்திரன் தெரிவித்துள்ளனர். மேலும் விழாவுக்கு சிறப்பு சேர்க்கும் விதமாக, மதுரையில் இருந்து அணையா ஜோதி ஊர்வலமும் நடத்தப்பட உள்ளதாகக் கூறியுள்ளார்.
கப்பலோட்டிய தமிழர் வ.உ.சி.,யின் 89வது நினைவு நாள், நவம்பர் 18ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. அந்நாளை ஒட்டி, அவர் பிறந்த ஓட்டப்பிடாரத்தில் அனைத்திந்திய முதலியார் பிள்ளைமார் அமைப்பு (எய்ம்பா) சார்பில் குருபூஜை விழா நடக்க உள்ளது. பாஞ்சாலங்குறிச்சி சாலையில் உள்ள மைதானத்தில் இவ்விழா நடக்கிறது.
குருபூஜை நிகழ்வுக்கான பூமி பூஜை, மாநாட்டு பந்தல் கால்கோள் விழா நடந்தது. அனைத்திந்திய முதலியார் பிள்ளைமார் அமைப்பின் (எய்ம்பா) தலைவர் ஓம் சக்தி ராமச்சந்திரன் தலைமை வகித்தார். அமைப்புச் செயலாளர் வேலம்மாள், ஒருங்கிணைப்பாளர் கண்ணன், மண்டல செயலாளர்கள் முத்தையா, பாக்கியநாதன், மாவட்ட தலைவர்கள் பூதலிங்கம், லட்சுமணன், இளைஞரணி மகேஷ், ஊடகத் தொடர்பாளர் மு.ஆதவன் மற்றும் மாநில, மண்டல, மாவட்ட, இளைஞரணி நிர்வாகிகள் பலர் திரளாக கலந்து கொண்டனர்.
விழாவுக்கு இரண்டு நாட்கள் முன்னதாக மதுரை, திண்டுக்கல் மற்றும் கன்னியாகுமரியில் இருந்து அணையா ஜோதி ஊர்வலம் கிளம்புகிறது. வ.உ.சி, நினைவு நாளன்று, அந்த ஜோதி ஓட்டப்பிடாரத்தில் அவர் பிறந்த நினைவிடத்திற்கு ஊர்வலமாகக் கொண்டு சேர்க்கப்பட உள்ளது. அப்போது, 10 ஆயிரம் ரோஜாக்களைக் கொண்டு நினைவஞ்சலி செலுத்தப்படவும் உள்ளது. நிகழ்ச்சியில் முளைப்பாரி, வள்ளி கும்மி உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளும் நடக்க உள்ளன. அரசியல் கட்சி பிரமுகர்கள், தொழில் அதிபர்கள் மற்றும் பல முக்கிய பிரமுகர்களும் குரு பூஜையில் கலந்து கொள்ள உள்ளனர்.
••••••••
ஏப்ரல் 3-ல் பிரதமர் மோடி வருகை..! எதுக்கு தெரியுமா...?
திமுகவின் அதிரடி நடவடிக்கை...! கொண்டாடும் தொண்டர்கள்...! 26 வயதில் வேட்பாளர்...!
3 பேர் கைது...! 2 பைக் பறிமுதல்...! ஒரு ஆட்டோ பறிமுதல்....! அச்சத்தில் வியாபாரிகள்...! மக்கள் வரவேற்பு...!
கோவை வடக்கு தொகுதி - பா ஜ க வில் மல்லுக்கட்டு ! அண்ணனா ? அக்காவா ?
தேர்தல் அதிரடி...! கலெக்டரின் செயல்...! ஆச்சரியமூட்டும் நிகழ்வுகள்...!