by admin on | 2025-11-04 06:55 PM
*அ.தி.மு.க. பிரமுகர் உருவ பொம்மை எரிப்பு முயற்சி: விடுதலை தமிழ் புலிகள் கட்சியினர் 8 பேர் கைது!*
கும்பகோணம், நவ. 4:
தனியார் தொலைக்காட்சி விவாதம் ஒன்றில், கோவையைச் சேர்ந்த அ.தி.மு.க. நிர்வாகி ஒருவர் பட்டியல் இன மக்களை இழிவுபடுத்திப் பேசியதைக் கண்டித்து, கும்பகோணத்தில் நவம்பர் 3.ஆம் தேதி பெரும் பரபரப்பு ஏற்பட்டது.விடுதலை தமிழ் புலிகள் கட்சியின் மாவட்டத் தலைவர் விஜய் ஆனந்த் தலைமையில், கும்பகோணம் உச்சிப் பிள்ளையார் கோயில் அருகே திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, சர்ச்சைக்குரிய வகையில் பேசிய அ.தி.மு.க. நிர்வாகியின் உருவ பொம்மையை எரிக்க அவர்கள் முயற்சித்தனர். இந்த சம்பவத்தை அறிந்து
வன்முறையைத் தடுக்கும் விதமாக, கும்பகோணம் மாநகரப் பாதுகாப்புப் பணியில் இருந்த கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் திரு. சிவ செந்தில்குமார் தலைமையிலான காவலர்கள் உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வன்முறைச் செயலில் ஈடுபட்ட விடுதலை தமிழ் புலிகள் கட்சி நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி வன்முறைச் செயலை தடுக்கும் விதமாக தீவைக்கப்பட்ட உருவ பொம்மையின் தீயை போலீசார் உடனடியாக தண்ணீர் ஊற்றிக் கட்டுப்படுத்தி அணைத்தனர்.
இதனைத் தொடர்ந்து, உருவ பொம்மையை எரிக்க முயன்ற விடுதலை தமிழ் புலிகள் கட்சியினர் 8 பேரை காவல்துறையினர் கைது செய்து வாகனத்தில் ஏற்றிச் சென்றனர். இந்தச் சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.இந்த ஆர்ப்பாட்டம், அ.தி.மு.க. செய்தித் தொடர்பாளர் மற்றும் ஐ.டி. விங் பொறுப்பாளரான கோவை சத்யன் என்பவர், தனியார் தொலைக்காட்சி ஒன்றில் பட்டியலின மக்களை இழிவுபடுத்தும் வகையில் பேசியதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து அவர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய, தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
நிருபர் அ, மகேஷ்
ஏப்ரல் 3-ல் பிரதமர் மோடி வருகை..! எதுக்கு தெரியுமா...?
திமுகவின் அதிரடி நடவடிக்கை...! கொண்டாடும் தொண்டர்கள்...! 26 வயதில் வேட்பாளர்...!
3 பேர் கைது...! 2 பைக் பறிமுதல்...! ஒரு ஆட்டோ பறிமுதல்....! அச்சத்தில் வியாபாரிகள்...! மக்கள் வரவேற்பு...!
கோவை வடக்கு தொகுதி - பா ஜ க வில் மல்லுக்கட்டு ! அண்ணனா ? அக்காவா ?
தேர்தல் அதிரடி...! கலெக்டரின் செயல்...! ஆச்சரியமூட்டும் நிகழ்வுகள்...!