by Vignesh Perumal on | 2025-10-28 10:33 AM
சென்னையை அடுத்த ஆலந்தூர் பகுதியில், குத்தகை காலம் முடிவடைந்த பிறகும் வணிக ரீதியாக இயங்கி வந்த கட்டிடத்தை அரசு கையகப்படுத்தும் நடவடிக்கைக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கில், நிலத்தை அரசு மீட்கலாம் எனச் சாதகமான தீர்ப்பு வந்துள்ளதைத் தொடர்ந்து, ரூ.300 கோடி மதிப்புள்ள 15 கிரவுண்டு அரசு நிலம் இன்று (அக். 28, 2025) மீட்கப்பட்டுள்ளது.
ஆலந்தூரில் உள்ள இந்த சுமார் 15 கிரவுண்டு நிலம், பல ஆண்டுகளுக்கு முன்பு அரசுத் துறையின் கீழ் குத்தகைக்கு விடப்பட்டிருந்தது. அதன் குத்தகை காலம் முடிந்த பிறகும், அந்த இடத்தில் பிரபல ஹோட்டல் நிறுவனமான சரவணபவன் ஹோட்டல் இயங்கி வந்தது.
குத்தகை காலம் முடிவடைந்த நிலையில், இந்த நிலத்தைக் கையகப்படுத்த அரசு எடுத்த நடவடிக்கைக்கு எதிராக, ஹோட்டல் நிர்வாகம் தரப்பில் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், அந்த நிலத்தை அரசு கையகப்படுத்தக் குறைந்த கால குத்தகைதாரர்கள் மற்றும் அதிலிருந்து உரிமை பெற்றவர்கள் எதிர்ப்புத் தெரிவிக்க முடியாது என்று அரசுக்குச் சாதகமாகத் தீர்ப்பளித்தது.
நீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில், இன்று காலை வருவாய் மற்றும் பொதுப்பணித் துறை அதிகாரிகள் ஆலந்தூரில் உள்ள சரவணபவன் ஹோட்டலுக்கு வந்தனர்.
அதிகாரிகள் ஹோட்டல் ஊழியர்களை உடனடியாக வெளியேற்றினர். அதன்பின்னர், ஹோட்டலின் பெயர்ப் பலகை முழுவதுமாக அகற்றப்பட்டது. கடைசியாக, அரசு நிலத்தில் இயங்கி வந்த அந்த கட்டிடத்திற்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.
தற்போதைய சந்தை மதிப்பின்படி இந்த நிலத்தின் மதிப்பு சுமார் 300 கோடி ரூபாய் இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. அரசு நிலத்தை மீட்கும் நடவடிக்கைக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கில் தீர்ப்பு கிடைத்து, உடனடியாக நிலம் மீட்கப்பட்ட இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நிர்வாக ஆசிரியர் - பா.விக்னேஷ்பெருமாள்
SC/ST மக்களுக்கு இட ஒதுக்கீடு குறித்து பத்திரிக்கையாளர் கார்த்திக் சங்கர் விளக்கம்....!!!!"
பறவை காய்ச்சல் எதிரொலி - காகங்கள் இறப்பு -அரசு எச்சரிக்கை - பொதுமக்களே உஷார் !
கொரியன் லவ் கேம் - 3 சகோதரிகள் தற்கொலை - அதிர்ச்சி தகவல் - பெற்றோர்களே உஷார் !!
பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்படுமா? கார்த்திக்சங்கர் கேள்வி...???
குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை ...!!! தென் மண்டல காவல்துறை தலைவர் பாராட்டு