by admin on | 2025-10-04 08:30 PM
நடுக்கடலில் படகில் பதுங்கியுள்ள புஸ்ஸி ஆனந்த்: ஜாமீன் கேட்டு உச்ச நீதிமன்றத்தை நாட முடிவு.
புஸ்ஸி ஆனந்த் ராமேஸ்வரம் பகுதிக்கு சென்றுள்ளதாக தெரிகிறது. செல்போனை சுவிட்ச் ஆஃப் செய்து விட்டு, அவர் ராமேஸ்வரம் சென்றுள்ளாராம். தொடர்ந்து, படகு மூலம் ெசல்போன் சிக்னல் கிடைக்காத பகுதிக்கு அவரை தவெக நிர்வாகிகள் அழைத்து சென்றுள்ளார்களாம். கடலில் படகில் பதுங்கியுள்ள தகவல் தனிப்படை போலீசாருக்கு கிடைத்துள்ளது. இதையடுத்து, தூத்துக்குடி மற்றும் ராமேஸ்வரம் பகுதியில் கடலில் ரோந்து செல்ல போலீசார் முடிவு செய்துள்ளனர். இந்நிலையில் நாளை மறுதினம் (திங்கட் கிழமை) முன்ஜாமீன் கோரி இருவரும் உச்ச நீதிமன்றத்தை நாட முடிவு செய்துள்ளனர். இன்றும், நாளையும் விடுமுறை என்பதால், 2 நாட்களும் போலீசின் பிடியில் சிக்காமல் இருப்பதற்காக கடலில் பதுங்கியுள்ளதாக கூறப்படுகிறது
T. Muthu kamachi evidence editor.9842337244