by Vignesh Perumal on | 2025-10-04 02:41 PM
புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி காவல் நிலையத்தில் பணிபுரிந்த பெண் உதவி ஆய்வாளர் (எஸ்.ஐ.) லட்சுமிபிரியா (33), வீட்டில் துணி அயர்ன் செய்துகொண்டிருந்தபோது மின்சாரம் தாக்கியதில் பரிதாபமாக உயிரிழந்தார்.
மணமேல்குடி காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராகப் பணியாற்றி வந்த லட்சுமிபிரியா, இன்று (அக்டோபர் 4, 2025) தனது வீட்டில் துணிகளை அயர்ன் செய்துகொண்டிருந்தார். அப்போது, எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கியதில் அவர் தூக்கி எறியப்பட்டார்.
உடனடியாக அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே லட்சுமிபிரியா உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து மணமேல்குடி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இளம் வயதில் பெண் காவல் உதவி ஆய்வாளர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம், காவல்துறை வட்டாரத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆசிரியர்கள் குழு.....
தேனியில் முதல்வர் விஜய் பிறந்தநாள் விழா...!!!
வேடசந்தூரில் போலீஸ் அதிரடி நடவடிக்கை....!
வீட்டில் குட்கா...! போலீஸ் அதிரடி பறிமுதல்...! கைது....!
போதையில் தாறுமாறாக கார் ஓட்டி விபத்து ! சஸ்பெண்ட் கமிஷனர் கைது.!!
மனைவி, கள்ளக்காதலனுக்கு சரமாரி அரிவாள் வெட்டு - கணவன் வெறிச்செயல் ! தப்பிய கணவனுக்கு போலீஸ் வலைவீச்சு !!