| | | | | | | | | | | | | | | | | | |
கிரைம் Crime

குளத்தில் தவறி விழுந்தவர் பலி...????

by admin on | 2025-10-03 12:52 PM

Share:


குளத்தில் தவறி விழுந்தவர் பலி...????

திண்டுக்கல் கோட்டைகுளத்தில் தவறி விழுந்து நீரில் மூழ்கி வாலிபர் பலி.


திண்டுக்கல், அரண்மனைக்குளம் காந்திஜி புதுரோடு, சிவன்கோயில் பின்புறம் பகுதியை சேர்ந்த செல்வம் மகன் சரவணகுமார்(35) இவர் திண்டுக்கல், கோட்டைகுளத்திற்கு குளிக்க சென்ற போது தவறி விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்தார்.தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் சரவணகுமாரின் உடலை குளத்திலிருந்து மீட்டனர்.


நகர் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் ராஜசேகர், சார்பு ஆய்வாளர் முனியம்மாள் மற்றும் காவலர்கள் சரவணகுமாரின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


செய்தியாளர் மோகன்ராஜ் திண்டுக்கல்.

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment