by Vignesh Perumal on | 2025-09-29 10:24 AM
தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெ.க.) தலைவர் நடிகர் விஜய் கலந்துகொண்ட பேரணியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இன்று (செப்டம்பர் 29, 2025) மேலும் ஒரு உயிரிழப்புடன் 41 ஆக அதிகரித்துள்ளது.
கரூர், வேலுச்சாமிபுரம் பகுதியைச் சேர்ந்த சுகுணா (65) என்பவர், கூட்ட நெரிசலில் படுகாயமடைந்து கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருந்த நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
இந்தத் துயரச் சம்பவத்தில் தொடர்ச்சியாக உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவது, தமிழகத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்துக்கான காரணங்கள் குறித்துக் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும், ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
நிர்வாக ஆசிரியர் - பா.விக்னேஷ்பெருமாள்
மனைவியிடம் ஆபாச பேச்சு - அடங்காத ஆத்திரம் ! 5 ஆண்டுகள் கழித்து பழி தீர்த்த கொடூரம் !! சில மணிகளில் தூக்கிய போலீஸ் !!!
இன்ஸ்பெக்டருக்கு அரிவாள் வெட்டு ! சுட்டுப் பிடித்த போலீஸ் !!
அரசு ஊழியர்களுக்கு ஆப்பு ! த வெ க அரசு அதிரடி !!
ATM மையங்களில் கைவரிசை காட்டிய இளம் பெண் கைது! ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலீஸ் !!
மெகா போக்குவரத்து மாற்றம் - வாகன ஓட்டிகளே உஷார் !!