by Vignesh Perumal on | 2025-09-28 01:59 PM
தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெ.க.) தலைவர் நடிகர் விஜய் கலந்துகொண்ட பேரணியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இன்று (செப்டம்பர் 28, 2025) 40 ஆக உயர்ந்துள்ளது.
கரூர் மாவட்டத்தில் நடைபெற்ற இந்தப் பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் காயமடைந்த பலர், கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில், கவலைக்கிடமான நிலையில் இருந்த ஒரு நபர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். இதன் மூலம், இந்த விபத்தில் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 40 ஆக அதிகரித்துள்ளது.
இந்தத் துயரச் சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்து தொடர்பாகக் காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. மேலும், ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்குத் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் நிதியுதவி அறிவித்துள்ளனர்.
ஆசிரியர்கள் குழு................
தேனியில் முதல்வர் விஜய் பிறந்தநாள் விழா...!!!
வேடசந்தூரில் போலீஸ் அதிரடி நடவடிக்கை....!
வீட்டில் குட்கா...! போலீஸ் அதிரடி பறிமுதல்...! கைது....!
போதையில் தாறுமாறாக கார் ஓட்டி விபத்து ! சஸ்பெண்ட் கமிஷனர் கைது.!!
மனைவி, கள்ளக்காதலனுக்கு சரமாரி அரிவாள் வெட்டு - கணவன் வெறிச்செயல் ! தப்பிய கணவனுக்கு போலீஸ் வலைவீச்சு !!