by Vignesh Perumal on | 2025-09-28 01:35 PM
கரூர் மாவட்டத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெ.க.) தலைவர் நடிகர் விஜய் கலந்துகொண்ட பேரணியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்குத் தலா ₹2 லட்சம் நிவாரண உதவி வழங்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.
மேலும், இந்தக் கூட்ட நெரிசலில் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்குத் தலா ₹50,000 வழங்கப்படும் என்றும் பிரதமர் அறிவித்துள்ளார்.
பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கரூரில் நடந்த இந்தத் துயரச் சம்பவம் குறித்து பிரதமர் மிகுந்த வேதனை அடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இக்கட்டான சூழ்நிலையில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குத் தனது ஆழ்ந்த இரங்கலையும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையப் பிரார்த்திப்பதாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
சிகிச்சை பெற்று வருபவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்யும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.
நிர்வாக ஆசிரியர் - பா.விக்னேஷ்பெருமாள்
திருமணம் முடிந்த 5 மாதத்தில் திக்திக் தகவல்...! மனைவி உயிரிழப்பு...!
பிப்ரவரி 12-ல் மாபெரும் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு...! எதுக்கு தெரியுமா...?
பிப்ரவரி 12-ல் மாபெரும் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு...! எதுக்கு தெரியுமா...?
பிப்ரவரி 17-ல் அமைச்சர் அறிவிப்பு...! சபாநாயகர் அப்பாவு தகவல்...!
பிப்ரவரி 17-ல் அமைச்சர் அறிவிப்பு...! சபாநாயகர் அப்பாவு தகவல்...!