by Vignesh Perumal on | 2025-09-26 03:12 PM
மதுரை சமயநல்லூர் மின் கோட்ட பொறியாளர் அலுவலகத்தில் பணிபுரியும் பெண் ஊழியர்களை, கழிப்பறை ஜன்னல் வழியாகச் செல்போனில் வீடியோ எடுத்த மின் வாரிய வணிகப் பிரிவு ஆய்வாளர் ராஜராஜேஸ்வரன் (33) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சமயநல்லூர் மின் கோட்ட பொறியாளர் அலுவலகத்தில் பணியாற்றி வந்த வணிகப் பிரிவு ஆய்வாளர் ராஜராஜேஸ்வரன், அலுவலகத்தில் உள்ள கழிவறையைப் பயன்படுத்தும் பெண் ஊழியர்களை, அதன் ஜன்னல் வழியே ரகசியமாகச் செல்போனில் வீடியோ எடுத்ததாகப் புகார் எழுந்தது.
சந்தேகம் அடைந்த பெண் ஊழியர்கள் அளித்த புகாரின் அடிப்படையில், மற்ற ஊழியர்கள் ராஜராஜேஸ்வரனை கையும் களவுமாகப் பிடித்து, அவரது செல்போனை ஆய்வு செய்தனர். அப்போது, அதில் அலுவலகத்தில் பணிபுரியும் பல பெண் ஊழியர்களைப் படமெடுத்த வீடியோக்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
உடனடியாகச் சமயநல்லூர் காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார், மின்வாரிய ஆய்வாளர் ராஜராஜேஸ்வரனைக் கைது செய்தனர். அவர் மீது வழக்குப்பதிவு செய்து, இச்சம்பவம் குறித்துத் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரசு அலுவலகம் ஒன்றில் நடந்த இந்தச் சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், பெண் ஊழியர்கள் மத்தியில் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
நிர்வாக ஆசிரியர்- பா.விக்னேஷ்பெருமாள்
டி ஜி பி நியமனம் - மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை !
அரசியல் நாயகன், அரசியல் எதிரி இருவேறு பார்வை...! முன்னாள் தலைவர் அண்ணாமலை...!
திருமணம் முடிந்த 5 மாதத்தில் திக்திக் தகவல்...! மனைவி உயிரிழப்பு...!
பிப்ரவரி 12-ல் மாபெரும் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு...! எதுக்கு தெரியுமா...?
பிப்ரவரி 17-ல் அமைச்சர் அறிவிப்பு...! சபாநாயகர் அப்பாவு தகவல்...!