by Vignesh Perumal on | 2025-09-26 03:00 PM
தேனி மாவட்டம், பெரியகுளம் கீழ வடகரை ஊர்ப்புற நூலகத்தின் புதிய கட்டிடம், தமிழ்நாடு அரசின் பொது நூலக இயக்ககம் சார்பில், மாண்புமிகு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களால் இன்று (செப்டம்பர் 26, 2025) காணொளி வாயிலாகத் திறந்து வைக்கப்பட்டது. இந்தக் கட்டிடம் சுமார் ₹22 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ளது.
புதிய நூலகக் கட்டிடம் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து, கீழ வடகரை வாசகர் வட்டம் சார்பில் குத்துவிளக்கு ஏற்றி, நூலகம் பொதுமக்களின் பயன்பாட்டிற்காகத் தொடங்கி வைக்கப்பட்டது.
இந்த நிகழ்வில், வாசகர் வட்டத்தின் தலைவர் மோகன், ஜெயராஜ், மணி பூசாரி, அன்புக்கரசன், மணி கார்த்திக் (இன்சூரன்ஸ்), பால்ராஜ், பொறியாளர் சந்திரமோகன் ஆகியோர் உட்படப் பலர் கலந்துகொண்டனர். மேலும், நூலகர்கள் சவடமுத்து, குமரன், சண்முகம் ஆகியோரும், ஏராளமான வாசகர்கள் மற்றும் பொதுமக்களும் பங்கேற்றனர். நிகழ்ச்சியின் முடிவில், நூலகர் ராஜகோபால் நன்றி கூறினார்.
இந்தச் செயல்பாடு, கீழ வடகரைப் பகுதி மக்களின் கல்வி மற்றும் வாசிப்பு ஆர்வத்தை மேலும் மேம்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நிர்வாக ஆசிரியர்- பா.விக்னேஷ்பெருமாள்
தேனியில் முதல்வர் விஜய் பிறந்தநாள் விழா...!!!
வேடசந்தூரில் போலீஸ் அதிரடி நடவடிக்கை....!
வீட்டில் குட்கா...! போலீஸ் அதிரடி பறிமுதல்...! கைது....!
போதையில் தாறுமாறாக கார் ஓட்டி விபத்து ! சஸ்பெண்ட் கமிஷனர் கைது.!!
மனைவி, கள்ளக்காதலனுக்கு சரமாரி அரிவாள் வெட்டு - கணவன் வெறிச்செயல் ! தப்பிய கணவனுக்கு போலீஸ் வலைவீச்சு !!