by Vignesh Perumal on | 2025-09-26 02:24 PM
தேனி மாவட்டம், பெரியகுளம் நகராட்சியில் தூய்மைப் பணியாளர்கள் மீது தாக்குதல் நடத்திய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, தூய்மைப் பணியாளர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பெரியகுளம் நகராட்சியில் ஒப்பந்தத் தூய்மைப் பணியாளர்களாக பெத்தானசாமி மற்றும் குப்பை சேகரிப்பு வாகன ஓட்டுநர் வைரவன் ஆகியோர் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள், வடகரை பள்ளிவாசல் பின்புறம் உள்ள பகுதிகளில் நகரின் தூய்மைப் பணியை மேற்கொண்டிருந்தனர்.
அப்போது, அப்பகுதியைச் சேர்ந்த சல்மான் பாரிஸ் என்பவர், அவர்களைத் தூய்மைப் பணியை மேற்கொள்ள விடாமல் தடுத்துள்ளார். அத்துடன், அவர்களை மிகவும் அசிங்கமாகப் பேசியதோடு, பெத்தானசாமி மற்றும் வைரவன் ஆகிய இருவர் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த தூய்மைப் பணியாளர்கள் அனைவரும், தங்களுக்குப் பாதுகாப்பு வழங்கக் கோரியும், தாக்குதல் நடத்தியவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், பெரியகுளம் பழைய பேருந்து நிலையம் முகப்புப் பகுதியில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த மறியலால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு பரபரப்பு நிலவியது.
சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த பெரியகுளம் போலீசார் மற்றும் பெரியகுளம் நகராட்சி சுகாதார ஆய்வாளர் அசன் முகமது ஆகியோர் உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள், மறியலில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளர்களிடம் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினர்.
தாக்குதல் நடத்திய நபர் மீது உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று போலீசார் மற்றும் சுகாதார ஆய்வாளர் உறுதியளித்ததைத் தொடர்ந்து, தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தைக் கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். தூய்மைப் பணியாளர்களைத் தாக்கிய இந்தச் சம்பவம் பெரியகுளம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நிர்வாக ஆசிரியர்- பா.விக்னேஷ்பெருமாள்
பியூட்டி பார்லரில் பெண்களை மிரட்டி பணம் பறிப்பு ! போலீசார் இருவர் கைது !!
விளாத்திகுளம் சம்பவம் - டி என் ஏ சோதனை ! குற்றவாளிக்கு எதிராக முடிவுகள் - ஆதாரம் உறுதி !
பி டி ஆர் க்கு டஃப் கொடுக்கும் சுந்தர் சி ! வேட்பாளர் ஆனது எப்படி ?
ஆண்டிப்பட்டியில் அற்புதம்..! 3-வது முறையாக..! கோட்டையில் யார் கொடி..! கொண்டாடும் இணையவாசிகள்...!
மத்திய அமைச்சர் எல்.முருகன் வாகனம் சிறைபிடிப்பு..! பாஜக தொண்டர்கள் கடும் எதிர்ப்பு...!