by Vignesh Perumal on | 2025-09-25 09:19 PM
அ.தி.மு.க-வில் பிளவுபட்டிருக்கும் அனைத்துத் தலைவர்களையும் ஒன்றிணைக்கும் முயற்சியில், முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், இன்று (செப்டம்பர் 25, 2025) முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசியது, அ.தி.மு.க. அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அ.தி.மு.க-வில் கடந்த 2022-ஆம் ஆண்டு ஒற்றைத் தலைமை விவகாரம் ஏற்பட்ட பிறகு, முன்னாள் முதலமைச்சர்கள் எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர்செல்வத்துக்கும் இடையே கடுமையான கருத்து வேறுபாடுகள் உருவாகின. இந்த விவகாரத்தில், கட்சியின் பொதுச் செயலாளர் பதவியை இ.பி.எஸ். கைப்பற்ற, ஓ.பி.எஸ். கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.
சமீப காலமாக, அ.தி.மு.க-வின் மூத்த தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் மத்தியில், கட்சி மீண்டும் ஒன்றுபட வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்று வருகிறது. இந்த நிலையில், அண்மையில் கட்சிப் பொறுப்புகளில் இருந்து விலகுவதாக அறிவித்த முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், கடந்த சில தினங்களுக்கு முன் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த ஓ.பி.எஸ். ஆதரவாளர்களைச் சந்தித்தார்.
அந்தச் சந்திப்பைத் தொடர்ந்து, இன்று சென்னை, கோட்டூர்புரத்தில் உள்ள ஓ.பன்னீர்செல்வத்தின் இல்லத்திற்குச் சென்ற செங்கோட்டையன், அவரைச் சந்தித்துப் பேசுகிறார்.
இந்தச் சந்திப்பின்போது, அ.தி.மு.க.வில் உள்ள அனைத்துத் தலைவர்களையும் ஒன்றிணைப்பது, பிளவுகளால் கட்சிக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள், எதிர்வரும் தேர்தல்களை எதிர்கொள்ளும் உத்திகள் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நிர்வாக ஆசிரியர்- பா.விக்னேஷ்பெருமாள்
பியூட்டி பார்லரில் பெண்களை மிரட்டி பணம் பறிப்பு ! போலீசார் இருவர் கைது !!
விளாத்திகுளம் சம்பவம் - டி என் ஏ சோதனை ! குற்றவாளிக்கு எதிராக முடிவுகள் - ஆதாரம் உறுதி !
பி டி ஆர் க்கு டஃப் கொடுக்கும் சுந்தர் சி ! வேட்பாளர் ஆனது எப்படி ?
ஆண்டிப்பட்டியில் அற்புதம்..! 3-வது முறையாக..! கோட்டையில் யார் கொடி..! கொண்டாடும் இணையவாசிகள்...!
மத்திய அமைச்சர் எல்.முருகன் வாகனம் சிறைபிடிப்பு..! பாஜக தொண்டர்கள் கடும் எதிர்ப்பு...!