by Vignesh Perumal on | 2025-09-25 08:56 PM
திண்டுக்கல் மாவட்டம், பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் பக்தர்கள் காணிக்கையாகச் செலுத்திய உண்டியல்கள் இரண்டு நாட்கள் எண்ணப்பட்டன. இதில், மொத்த வருவாயாக ₹4 கோடியே 16 லட்சத்து 34 ஆயிரத்து 199 ரொக்கப் பணம் கிடைத்துள்ளது.
பழனி கோயிலில் பக்தர்கள் அதிக அளவில் காணிக்கை செலுத்தி வருவது வழக்கம். இந்த முறை உண்டியல் எண்ணப்பட்டபோது, பின்வரும் பொருட்கள் காணிக்கையாகக் கிடைத்தன. அதாவது ரொக்கப் பணம் ₹4,16,34,199, தங்கம் 890 கிராம், வெள்ளி 12,275 கிராம், வெளிநாட்டு கரன்சி 1485 இவை தவிர, பக்தர்கள் பித்தளை வேல், கைக்கடிகாரங்கள், ஏலக்காய், முந்திரி, நவதானியங்கள், பட்டு ஆடைகள் போன்ற பொருட்களையும் காணிக்கையாகச் செலுத்தியிருந்தனர்.
கோயிலின் நிர்வாகம், பக்தர்களின் காணிக்கைகளை வெளிப்படைத்தன்மையுடன் எண்ணி, அதன் விவரங்களை அறிவித்துள்ளது.
நிர்வாக ஆசிரியர்- பா.விக்னேஷ்பெருமாள்
மனைவியிடம் ஆபாச பேச்சு - அடங்காத ஆத்திரம் ! 5 ஆண்டுகள் கழித்து பழி தீர்த்த கொடூரம் !! சில மணிகளில் தூக்கிய போலீஸ் !!!
இன்ஸ்பெக்டருக்கு அரிவாள் வெட்டு ! சுட்டுப் பிடித்த போலீஸ் !!
அரசு ஊழியர்களுக்கு ஆப்பு ! த வெ க அரசு அதிரடி !!
ATM மையங்களில் கைவரிசை காட்டிய இளம் பெண் கைது! ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலீஸ் !!
மெகா போக்குவரத்து மாற்றம் - வாகன ஓட்டிகளே உஷார் !!