by Vignesh Perumal on | 2025-09-25 08:44 PM
தேனி மாவட்ட நிர்வாகம் மற்றும் சுற்றுலாத் துறை சார்பில், “சுருளி சாரல் திருவிழா-2025” வருகின்ற செப்டம்பர் 27 மற்றும் 28 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் ரஞ்ஜீத் சிங் தெரிவித்துள்ளார்.
காலை 10.30 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும் இந்தத் திருவிழாவில், தேனி மாவட்டத்தின் சுற்றுலாத் தலங்கள் மற்றும் கலாச்சாரப் பெருமைகளை வெளிப்படுத்தும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள், நாட்டுப்புறக் கலைஞர்களின் கிராமிய நிகழ்ச்சிகள் மற்றும் சிலம்பம் போன்ற பாரம்பரியக் கலை நிகழ்ச்சிகள் இடம்பெறும்.
செய்தித்துறை, சுற்றுலாத் துறை, வேளாண்மைத் துறை, தோட்டக்கலைத் துறை, சமூகநலத் துறை உட்படப் பல்வேறு அரசுத் துறைகளின் சார்பில் விழிப்புணர்வுக் கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட உள்ளன. மேலும், மகளிர் சுயஉதவிக் குழுக்கள் தயாரிக்கும் பொருட்கள், சிறுதானிய உணவு வகைகள், மலர்ச் செடிகள், மரக்கன்றுகள் ஆகியவற்றின் கண்காட்சி மற்றும் விற்பனைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் நாய்கள் கண்காட்சி போன்றவை நடத்தப்படும். சமூகநலத் துறை சார்பில் பெண்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும், தேசிய ஊட்டச்சத்து மாதத்தை முன்னிட்டு குழந்தைகளுக்கு வழங்கப்படும் சத்தான உணவு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடைபெறும்.
சுருளி சாரல் திருவிழாவிற்கு வரும் பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் வசதிக்காகக் குடிநீர், சிறப்புப் பேருந்து வசதி மற்றும் வாகன நிறுத்துமிடம் போன்ற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த விழாவில் பொதுமக்கள் அனைவரும் பங்கேற்றுச் சிறப்பிக்குமாறு மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார்.
நிர்வாக ஆசிரியர்- பா.விக்னேஷ்பெருமாள்
மனைவியிடம் ஆபாச பேச்சு - அடங்காத ஆத்திரம் ! 5 ஆண்டுகள் கழித்து பழி தீர்த்த கொடூரம் !! சில மணிகளில் தூக்கிய போலீஸ் !!!
இன்ஸ்பெக்டருக்கு அரிவாள் வெட்டு ! சுட்டுப் பிடித்த போலீஸ் !!
அரசு ஊழியர்களுக்கு ஆப்பு ! த வெ க அரசு அதிரடி !!
ATM மையங்களில் கைவரிசை காட்டிய இளம் பெண் கைது! ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலீஸ் !!
மெகா போக்குவரத்து மாற்றம் - வாகன ஓட்டிகளே உஷார் !!