by Vignesh Perumal on | 2025-09-25 03:40 PM
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே உள்ள ஜி. தும்மலப்பட்டி கிளை அஞ்சல் அலுவலகத்தில், ₹52 லட்சத்திற்கும் மேல் பணத்தைக் கையாடல் செய்ததாகக் குற்றம்சாட்டப்பட்ட அஞ்சல் அலுவலர் முனியாண்டி (59), பொள்ளாச்சி அருகே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
ஜி. தும்மலப்பட்டியைச் சேர்ந்த முனியாண்டி, கடந்த 2016-ஆம் ஆண்டு முதல் அஞ்சல் அலுவலராகப் பணியாற்றி வந்தார். அவர் மீது பணக் கையாடல் தொடர்பாகப் புகார்கள் எழுந்த நிலையில், அதிகாரிகள் அவரது கணக்குகளைத் தணிக்கை செய்தனர்.
தணிக்கையின் முடிவில், அவர் பல்வேறு சேமிப்புத் திட்டங்களான செல்வமகள் சேமிப்புத் திட்டம், சேமிப்புக் கணக்கு, நடப்புக் கணக்கு ஆகியவற்றில் உள்ள 87 வாடிக்கையாளர்களின் கணக்குகளில் இருந்து ₹52,05,650-ஐ கையாடல் செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து, அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட நிலையில், தலைமறைவானார்.
முனியாண்டியைப் பிடிக்க, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப் உத்தரவின் பேரில், மாவட்டக் குற்றப்பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் குமரேசன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படையினர் நடத்திய விசாரணையில், முனியாண்டி பொள்ளாச்சி அருகே கிணத்துக்கடவில் உள்ள ஒரு மர அறுவை மில்லில் கூலி வேலை செய்து வந்தது தெரியவந்தது.
உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், தலைமறைவான முனியாண்டியை கைது செய்தனர். பின்னர், அவர் திண்டுக்கல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.
நிர்வாக ஆசிரியர்- பா.விக்னேஷ்பெருமாள்
மனைவியிடம் ஆபாச பேச்சு - அடங்காத ஆத்திரம் ! 5 ஆண்டுகள் கழித்து பழி தீர்த்த கொடூரம் !! சில மணிகளில் தூக்கிய போலீஸ் !!!
இன்ஸ்பெக்டருக்கு அரிவாள் வெட்டு ! சுட்டுப் பிடித்த போலீஸ் !!
அரசு ஊழியர்களுக்கு ஆப்பு ! த வெ க அரசு அதிரடி !!
ATM மையங்களில் கைவரிசை காட்டிய இளம் பெண் கைது! ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலீஸ் !!
மெகா போக்குவரத்து மாற்றம் - வாகன ஓட்டிகளே உஷார் !!