by Vignesh Perumal on | 2025-09-25 03:21 PM
உளுந்தூர்பேட்டை அருகே திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில், சாலையோரம் நின்று கொண்டிருந்த தனியார் பேருந்து மீது லாரி மோதியதில், பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், பேருந்தில் பயணித்த 15 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ராமநாதபுரத்திலிருந்து சென்னை நோக்கி சுமார் 40 பயணிகளுடன் ஒரு தனியார் டிராவல்ஸ் பேருந்து வந்துகொண்டிருந்தது. உளுந்தூர்பேட்டை அருகே பேருந்து பழுதானதால், சாலையோரத்தில் நிறுத்தப்பட்டது. அப்போது, அவ்வழியாக அதிவேகமாக வந்த ஒரு லாரி, பேருந்தின் பின்னால் பயங்கரமாக மோதியது.
லாரி மோதிய வேகத்தில், பேருந்து நிலைதடுமாறிச் சாலையோரத்தில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது. விபத்து நடந்ததும், பயணிகள் அலறினர். உடனடியாக அப்பகுதி மக்கள் மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர்.
விபத்தில் காயமடைந்த 15 பேர் உடனடியாக மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விபத்து காரணமாக, திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர், இரண்டு கிரேன்கள் உதவியுடன் விபத்துக்குள்ளான பேருந்து மீட்கப்பட்டு, போக்குவரத்து சீரானது.
விபத்து குறித்து, எடைக்கல் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நிர்வாக ஆசிரியர்- பா.விக்னேஷ்பெருமாள்
தேனியில் முதல்வர் விஜய் பிறந்தநாள் விழா...!!!
வேடசந்தூரில் போலீஸ் அதிரடி நடவடிக்கை....!
வீட்டில் குட்கா...! போலீஸ் அதிரடி பறிமுதல்...! கைது....!
போதையில் தாறுமாறாக கார் ஓட்டி விபத்து ! சஸ்பெண்ட் கமிஷனர் கைது.!!
மனைவி, கள்ளக்காதலனுக்கு சரமாரி அரிவாள் வெட்டு - கணவன் வெறிச்செயல் ! தப்பிய கணவனுக்கு போலீஸ் வலைவீச்சு !!