by Vignesh Perumal on | 2025-09-24 02:57 PM
இளம் சாதனையாளர்களுக்கான பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகைத் திட்டத்தின் (PM-YASASVI) கீழ், இதர பிற்படுத்தப்பட்டோர் (BC/MBC/DNC), பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் மற்றும் சீர்மரபினர் ஆகிய பிரிவுகளைச் சேர்ந்த மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று தேனி மாவட்ட ஆட்சியர் ரஞ்ஜீத் சிங் தெரிவித்துள்ளார்.
இந்தத் திட்டம், பட்டியலிடப்பட்ட சிறந்த பள்ளிகளில் (Top Class Schools) பயிலும் மாணவர்களுக்கு நிதி உதவி வழங்குவதன் மூலம், அவர்களின் கல்வியை உறுதி செய்கிறது.
விண்ணப்பிப்பதற்கான தகுதியாக மாணவர்கள் 2025-26 கல்வியாண்டில் 9 மற்றும் 11-ஆம் வகுப்புகளில் பயில்பவர்களாக இருக்க வேண்டும். பெற்றோரின் ஆண்டு வருமானம் ₹2.50 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். பட்டியலிடப்பட்ட பள்ளிகளின் விவரங்களை முதன்மைக் கல்வி அலுவலகத்தில் அறிந்துகொள்ளலாம்.
மேலும் விண்ணப்பிக்கும் முறை குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய மாணவர்கள் https://scholarships.gov.in என்ற இணையதளத்திற்குச் சென்று, தங்கள் கைபேசி எண் மற்றும் ஆதார் எண்ணைப் பதிவு செய்து, OTR Number மற்றும் கடவுச்சொல்லைப் பெற வேண்டும். அதைப் பயன்படுத்தித் தேவையான ஆவணங்களைப் பதிவேற்றம் செய்து புதிய விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்யலாம்.
பழைய மாணவர்கள் கடந்த நிதியாண்டில் இந்தத் திட்டத்தின் கீழ் பயன்பெற்ற மாணவர்கள், அதே இணையதளத்தில் தங்கள் OTR Number-ஐப் பயன்படுத்தி, 2025-26 ஆம் ஆண்டுக்கான விண்ணப்பத்தைப் புதுப்பிக்கலாம்.
இந்தத் திட்டத்திற்கு விண்ணப்பிக்கக் கடைசித் தேதி செப்டம்பர் 30, 2025 ஆகும். மாணவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார்.
நிர்வாக ஆசிரியர்- பா.விக்னேஷ்பெருமாள்
டி ஜி பி நியமனம் - மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை !
அரசியல் நாயகன், அரசியல் எதிரி இருவேறு பார்வை...! முன்னாள் தலைவர் அண்ணாமலை...!
திருமணம் முடிந்த 5 மாதத்தில் திக்திக் தகவல்...! மனைவி உயிரிழப்பு...!
பிப்ரவரி 12-ல் மாபெரும் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு...! எதுக்கு தெரியுமா...?
பிப்ரவரி 17-ல் அமைச்சர் அறிவிப்பு...! சபாநாயகர் அப்பாவு தகவல்...!