| | | | | | | | | | | | | | | | | | |
மாவட்டம் Dindigul

கொடைக்கானலில் பரபரப்பு...! வனப்பகுதியில் படப்பிடிப்பு..! ₹75,000 அபராதம்...!

by Vignesh Perumal on | 2025-09-24 02:19 PM

Share:


கொடைக்கானலில் பரபரப்பு...! வனப்பகுதியில் படப்பிடிப்பு..! ₹75,000 அபராதம்...!

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் பெரும்பள்ளம் வனச்சரகத்துக்கு உட்பட்ட பண்ணைக்காடு அருங்காணல் காப்புக்காடு பகுதியில், வனத்துறையின் அனுமதி இல்லாமல் தனியார் படப்பிடிப்பு நிறுவனத்தினர் படப்பிடிப்பில் ஈடுபட்டதால், அவர்களுக்கு ₹75,000 அபராதம் விதிக்கப்பட்டது.

கொடைக்கானல் வனப்பகுதிக்கு உட்பட்ட காளியம்மன் கோயில் சரகம் பகுதியில், தனியார் படப்பிடிப்பு நிறுவனம் ஒன்று, வனத்துறையிடம் உரிய அனுமதி பெறாமல் படப்பிடிப்பு நடத்திக்கொண்டிருந்தது.

இதைக் கண்ட பொதுமக்கள், உடனடியாக வனத்துறை அதிகாரிகளுக்குத் தகவல் அளித்தனர். தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறை அதிகாரிகள், படப்பிடிப்புக் குழுவினரிடம் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், அவர்கள் வனத்துறையிடம் எந்தவித அனுமதியும் பெறாமல் படப்பிடிப்பு நடத்தியது உறுதி செய்யப்பட்டது.

மாவட்ட வன அலுவலரின் உத்தரவின்பேரில், உதவி வனப் பாதுகாவலரின் அறிவுறுத்தலின்படி, பெரும்பள்ளம் வனச்சரக அதிகாரி, படப்பிடிப்பில் ஈடுபட்ட மூன்று பேருக்குத் தலா ₹25,000 வீதம் மொத்தம் ₹75,000 அபராதம் விதித்து, அந்தத் தொகையை வசூலித்தார்.

வனப்பகுதிகளின் பாதுகாப்பு மற்றும் கட்டுப்பாடுகளை மீறியதற்கான இந்த நடவடிக்கை, எதிர்காலத்தில் இதுபோன்ற சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடுவோருக்கு ஒரு எச்சரிக்கையாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.





நிர்வாக ஆசிரியர்- பா.விக்னேஷ்பெருமாள்

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment