by Vignesh Perumal on | 2025-09-23 05:16 PM
திண்டுக்கல் மாவட்டம், நந்தவனப்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்த கல்லூரி மாணவர் ஒருவர், பின்னால் வந்த பேருந்து மோதி சம்பவ இடத்திலேயே தலைநசுங்கி உயிரிழந்தார்.
இன்று (செப்டம்பர் 23, 2025) மதியம், திண்டுக்கல் நந்தவனப்பட்டியைச் சேர்ந்த இரண்டு கல்லூரி மாணவர்கள், ஒரு இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தனர். அப்போது, வாகனத்தின் பின்னால் அமர்ந்திருந்த மாணவர் எதிர்பாராதவிதமாக வாகனத்தில் இருந்து தவறி கீழே விழுந்தார்.
அதே நேரத்தில், பின்னால் வந்த ஒரு தனியார் பேருந்து மாணவர் மீது ஏறியதால், அவர் சம்பவ இடத்திலேயே தலைநசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். உடனிருந்த மற்றொரு மாணவர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்.
இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இருசக்கர வாகனத்தில் செல்லும்போதும், பேருந்துகளில் பயணிக்கும்போதும், மாணவர்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும் எனப் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
ஆசிரியர்கள் குழு.....
டி ஜி பி நியமனம் - மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை !
அரசியல் நாயகன், அரசியல் எதிரி இருவேறு பார்வை...! முன்னாள் தலைவர் அண்ணாமலை...!
திருமணம் முடிந்த 5 மாதத்தில் திக்திக் தகவல்...! மனைவி உயிரிழப்பு...!
பிப்ரவரி 12-ல் மாபெரும் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு...! எதுக்கு தெரியுமா...?
பிப்ரவரி 17-ல் அமைச்சர் அறிவிப்பு...! சபாநாயகர் அப்பாவு தகவல்...!