by Vignesh Perumal on | 2025-09-22 05:56 PM
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், கல்லூரி மாணவர்கள் பங்கேற்கும் கல்வியில் சிறந்த தமிழ்நாடு நிகழ்ச்சிக்கான முன்னேற்பாடுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரஞ்ஜீத் சிங், இ.ஆ.ப. அவர்கள் தலைமையில் இன்று (22/09/2025) நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது,"தமிழ்நாடு அரசின் சார்பில், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்காக செயல்படுத்தப்படும் நான் முதல்வன். புதுமைப்பெண் தமிழ் புதல்வன் காலை உணவுத்திட்டம் மற்றும் விளையாட்டுத்துறையில் செயல்படுத்தப்படும் சீரிய திட்டங்கள் மூலம் அரசு பள்ளியில் பயின்ற மாணவ/மாணவியர்கள் அதிகளவில் உயர்கல்வியில் சேர்ந்துள்ளனர். மேலும் முதல் தலைமுறை பட்டதாரிகளும். பெண் கல்வியும் தமிழகத்தில் அதிகரித்துள்ளது.
எனவே. அரசின் திட்டங்கள் மூலம் சாதனை படைத்த LDIT 6000 621/மாணவியர்களை கௌரவிக்கும் வகையிலும். அரசு திட்டங்கள் குறித்து மாணவர்களிடம் விழிப்புணர்வு மற்றும் வழிகாட்டுதல்களை ஏற்படுத்துவதற்காகவும். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையில் சென்னை ஜவஹர்லால் நேரு உள் விளையாட்டு அரங்கில் 25.09.2025 அன்று மாலை 04.00 மணி அளவில் கல்வியில் சிறந்த தமிழ்நாடு நிகழ்ச்சி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களில் உள்ள கல்லூரிகளிலும் இந்நிகழ்ச்சி நேரலையில் ஒளிபரப்பு செய்யப்பட்டது.
எனவே தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் இந்நிகழ்ச்சியினை நேரலையில் ஒளிபரப்பு செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். மேலும், கல்லூரியில் பயிலும் அனைத்து மாணவர்களும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்பதை உறுதி செய்ய வேண்டும் மாணவர்களுக்கு தேவையான போக்குவரத்து உள்ளிட்ட வசதிகளை செய்து தர வேண்டும்.
மேலும், தேனி மாவட்டத்தில் 12-ஆம் வகுப்பு முடித்து இதுவரை உயர்கல்வியில் சேராத மாணவர்கள் உயர்கல்வி பயில நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மாணவர்கள் உயர்கல்வியில் சேருவதற்கு தேவையான சான்றிதழ்களை உடனடியாக வழங்ககோரி சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கும் அறிவுத்தப்பட்டுள்ளது எனவே. கல்லூரி சேர்க்கையின்போது, மாணவர்களின் சான்றிதழ்கள் ஏதேனும் விடுபட்டிருந்தால் கால அவகாசம் கொடுத்து உயர்கல்வி சேர்க்கையினை உறுதி செய்யவேண்டும்.
மேலும், 24092025 அன்று பசுமை தமிழ்நாடு (Green Tamilnadu) திட்டத்தின் கீழ் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட உள்ளது. அனைத்துக் கல்லூரிகளிலும் மரக்கன்றுகள் நடவு செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி ஐ. மகாலட்சுமி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) திருமுத்துமாதவன். தனித்துணை ஆட்சியர் (ச.பாதி) திரு.சண்முக சுந்தரம் உதவி ஆணையர் (கலால்) (பொ) திருமதி முத்துச்செல்வி மற்றும் கல்லூரி முதல்வர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
நிர்வாக ஆசிரியர்- பா.விக்னேஷ்பெருமாள்
டி ஜி பி நியமனம் - மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை !
அரசியல் நாயகன், அரசியல் எதிரி இருவேறு பார்வை...! முன்னாள் தலைவர் அண்ணாமலை...!
திருமணம் முடிந்த 5 மாதத்தில் திக்திக் தகவல்...! மனைவி உயிரிழப்பு...!
பிப்ரவரி 12-ல் மாபெரும் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு...! எதுக்கு தெரியுமா...?
பிப்ரவரி 17-ல் அமைச்சர் அறிவிப்பு...! சபாநாயகர் அப்பாவு தகவல்...!