by Vignesh Perumal on | 2025-09-22 05:39 PM
திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு பகுதியில் தொடர் அதிவேக இருசக்கர வாகனத் திருட்டில் ஈடுபட்ட மூன்று இளைஞர்களைக் காவல்துறையினர் கைது செய்து, மூன்று இருசக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்தனர்.
வத்தலகுண்டு காமராஜபுரம், காந்தி நகர் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக அதிவேக இருசக்கர வாகனத் திருட்டுகள் தொடர்ந்து அதிகரித்து வந்தன. இது குறித்து வத்தலகுண்டு காவல் நிலையத்தில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப் உத்தரவின் பேரில், நிலக்கோட்டை துணை காவல் கண்காணிப்பாளர் செந்தில்குமார் மேற்பார்வையில், வத்தலகுண்டு காவல் நிலைய ஆய்வாளர் கௌதமன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படையினர், காவல் உதவி ஆய்வாளர் ஷேக் அப்துல்லா மற்றும் காவலர் முருகன் ஆகியோர் அப்பகுதிகளில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், இந்தத் திருட்டுச் சம்பவங்களில் திண்டுக்கல் சீலபாடியைச் சேர்ந்த மணிகண்டன், கண்ணன் மற்றும் வெங்கடேசன் ஆகிய மூன்று இளைஞர்கள் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, மூவரையும் கைது செய்த காவல்துறையினர், அவர்களிடம் இருந்து திருடப்பட்ட மூன்று அதிவேக இருசக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்தனர்.
மேலும், அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நடவடிக்கையால், அப்பகுதி மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.
செய்தி - மோகன் கணேஷ் திண்டுக்கல்.
தேனியில் முதல்வர் விஜய் பிறந்தநாள் விழா...!!!
வேடசந்தூரில் போலீஸ் அதிரடி நடவடிக்கை....!
வீட்டில் குட்கா...! போலீஸ் அதிரடி பறிமுதல்...! கைது....!
போதையில் தாறுமாறாக கார் ஓட்டி விபத்து ! சஸ்பெண்ட் கமிஷனர் கைது.!!
மனைவி, கள்ளக்காதலனுக்கு சரமாரி அரிவாள் வெட்டு - கணவன் வெறிச்செயல் ! தப்பிய கணவனுக்கு போலீஸ் வலைவீச்சு !!