by Vignesh Perumal on | 2025-09-22 02:35 PM
திண்டுக்கல் மாநகர மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் துரை மணிகண்டன் மீது, அதே கட்சியைச் சேர்ந்த மாமன்ற உறுப்பினர் கார்த்திக், பண மோசடி மற்றும் கொலை மிரட்டல் விடுத்ததாகப் புகார் அளித்துள்ளார். இது குறித்து அவர், இன்று (செப்டம்பர் 22, 2025) திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார்.
திண்டுக்கல் மாநகராட்சி 21-வது வார்டு மாமன்ற உறுப்பினரும், கிழக்கு மண்டலத் தலைவருமான கார்த்திக் தனது புகார் மனுவில் தெரிவித்ததாவது: "திண்டுக்கல் மாநகர மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் துரை மணிகண்டன், என்னிடம் இரவலாக இன்னோவா கார் ஒன்றை வாங்கியுள்ளார். ஆனால், நீண்ட நாட்களாகியும் அதைத் திருப்பித் தரவில்லை. மேலும், பாலகிருஷ்ணாபுரத்தில் எனக்குச் சொந்தமான வீட்டிற்கு அவர் ₹20 லட்சம் பணம் தர வேண்டும்.
இந்தத் தொகையை நான் கேட்டபோது, துரை மணிகண்டன் தனது அடியார்களுடன் என் வீட்டிற்கு வந்து, என்னையும் என் வீட்டில் உள்ள பெண்களையும் கடுமையாக மிரட்டினார். இது குறித்துக் காவல் துறையில் புகார் அளித்தால், மதுரையில் இருந்து ரவுடிகளை வரவழைத்து என்னைக் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியுள்ளார்.
இந்த புகாரின் அடிப்படையில், காவல்துறையினர் உரிய விசாரணை நடத்தி, துரை மணிகண்டன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கார்த்திக் கோரிக்கை விடுத்துள்ளார். இந்தச் சம்பவம் திண்டுக்கல் காங்கிரஸ் கட்சி வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செய்தி - மோகன் கணேஷ் திண்டுக்கல்..
மனைவியிடம் ஆபாச பேச்சு - அடங்காத ஆத்திரம் ! 5 ஆண்டுகள் கழித்து பழி தீர்த்த கொடூரம் !! சில மணிகளில் தூக்கிய போலீஸ் !!!
இன்ஸ்பெக்டருக்கு அரிவாள் வெட்டு ! சுட்டுப் பிடித்த போலீஸ் !!
அரசு ஊழியர்களுக்கு ஆப்பு ! த வெ க அரசு அதிரடி !!
ATM மையங்களில் கைவரிசை காட்டிய இளம் பெண் கைது! ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலீஸ் !!
மெகா போக்குவரத்து மாற்றம் - வாகன ஓட்டிகளே உஷார் !!