by admin on | 2025-09-22 11:24 AM
*திண்டுக்கல்லில் ஏல சீட்டு நடத்தி ரூ.30,82,000 மோசடி பெண் உட்பட 2 பேர் கைது*
திண்டுக்கல்லை மேற்கு மீனாட்சி நாயக்கன்பட்டியை சேர்ந்த செந்தில்குமார் இவரிடம் திண்டுக்கல் நேருஜி நகரை சேர்ந்த அபுசக்மான் என்பவர் மற்றும் நூர்ஜகான் ஆகிய 2 பேரும் பழகி சாகர் பைனான்ஸ் நடத்தி வருவதாகவும் அதன் மூலம் மாத ஏல சீட்டு நடத்துவதாகவும் கூறி நம்பிக்கையை வரவழைத்து ஏல சீட்டில் சேர வைத்து மாதம் ரூ 2 லட்சம் என்று கூறி 20 மாதங்களுக்கு பணம் கட்ட வேண்டும் என்று தெரிவித்து வங்கி கணக்கு மூலம் ரூ.30,82,000 பெற்றுக் கொண்டு பணத்தை தர முடியாது என்று கூறி பணம் கேட்டு வந்தால் உன்னை கொன்று புதைத்து விடுவேன் 2 பேரும் கொலை மிரட்டல் விடுத்ததை தொடர்ந்து செந்தில்குமார் மாவட்ட S.P-யிடம் புகார் அளித்தார். இதைத் தொடர்ந்து மாவட்ட குற்றப்பிரிவு DSP.குமரேசன் தலைமையிலான போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு மேற்படி சம்பவத்தில் ஈடுபட்ட அபுசக்மான் மற்றும் உதவியாளர் நூர்ஜகான் ஆகிய 2 பேரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்
செய்தியாளர் மோகன் கணேஷ் திண்டுக்கல்
பியூட்டி பார்லரில் பெண்களை மிரட்டி பணம் பறிப்பு ! போலீசார் இருவர் கைது !!
விளாத்திகுளம் சம்பவம் - டி என் ஏ சோதனை ! குற்றவாளிக்கு எதிராக முடிவுகள் - ஆதாரம் உறுதி !
பி டி ஆர் க்கு டஃப் கொடுக்கும் சுந்தர் சி ! வேட்பாளர் ஆனது எப்படி ?
ஆண்டிப்பட்டியில் அற்புதம்..! 3-வது முறையாக..! கோட்டையில் யார் கொடி..! கொண்டாடும் இணையவாசிகள்...!
மத்திய அமைச்சர் எல்.முருகன் வாகனம் சிறைபிடிப்பு..! பாஜக தொண்டர்கள் கடும் எதிர்ப்பு...!