by admin on | 2025-09-21 05:37 PM
திண்டுக்கல் அஞ்சலி பைபாஸ் பகுதியில் பாஜக கூட்டம் நடைபெறுவதால் பாதுகாப்பு பணியில் நகர் டிஎஸ்பி கார்த்திக், தாலுகா காவல் நிலைய சார்பு ஆய்வாளர் அங்கமுத்து உள்ளிட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது
அஞ்சலி பைபாஸ் அருகே நான்கு வழி சாலையில் குடிபோதையில் 3 பேர் ஆட்டோவை சாலையில் இங்கும் அங்குமாக ஓட்டிக்கொண்டு வந்து கொண்டிருந்தனர்.விபத்து ஏதும் நடைபெறா வண்ணம் இருப்பதற்காக நகர் DSP.கார்த்திக், சப் இன்ஸ்பெக்டர் அங்கமுத்து மற்றும் போலீசார் நிறுத்த முயற்சி செய்தபோது அவர்கள் மீது ஆட்டோவை ஏற்ற முயற்சித்தனர் அவர்கள் உடனடியாக சுதாரித்து மயிரிழையில் தப்பினர்.போலீசார் துரத்தி சென்று 2 இடத்தில் நிறுத்த முயற்சி செய்தபோதும் போலீசார் மீது ஆட்டோவை ஏற்றி கொலை செய்ய முயற்சி செய்தனர். ஒரு வழியாக லஞ்ச ஒழிப்பு காவல் நிலையம் அருகே டிஎஸ்பி. கார்த்திக் தனது வாகனத்தை வைத்து அவர்களை தடுத்து நிறுத்தி அவர்களை பிடித்தபோதுஅவர்கள் குடிபோதையில் இருந்தது தெரியவந்தது மேலும் அவர்கள் திண்டுக்கல் அருகே உள்ள தோட்டனூத்து பகுதியை பகுதியை சேர்ந்தவர்கள் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது மேலும் இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
செய்தியாளர் மோகன் கணேஷ் திண்டுக்கல்.
மனைவியிடம் ஆபாச பேச்சு - அடங்காத ஆத்திரம் ! 5 ஆண்டுகள் கழித்து பழி தீர்த்த கொடூரம் !! சில மணிகளில் தூக்கிய போலீஸ் !!!
இன்ஸ்பெக்டருக்கு அரிவாள் வெட்டு ! சுட்டுப் பிடித்த போலீஸ் !!
அரசு ஊழியர்களுக்கு ஆப்பு ! த வெ க அரசு அதிரடி !!
ATM மையங்களில் கைவரிசை காட்டிய இளம் பெண் கைது! ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலீஸ் !!
மெகா போக்குவரத்து மாற்றம் - வாகன ஓட்டிகளே உஷார் !!