by admin on | 2025-09-21 05:05 PM
பழனியில் கஞ்சா விற்பனை செய்த 2 வாலிபர்கள் கைதுதிண்டுக்கல் மாவட்டம் பழனியில் கஞ்சா விற்பனை செய்வதாக பழனி DSP.தனஞ்செயன் அவர்களுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் பழனி நகர் இன்ஸ்பெக்டர் மணிமாறன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் விஜய் மற்றும் காவலர்கள் காரமடை மருத்துவர் பூங்கா பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது அப்பகுதியில் கஞ்சா விற்பனை செய்த வைரவன் கோவில் தெருவை சேர்ந்த பிரபாகரன், பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த கோபிநாத் ஆகிய 2 பேர் போலீசார் கண்டதும் தப்பி ஓட முயற்சி செய்தபோது சுற்றி வளைத்து பிடித்த போலீசார் 2 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்து கஞ்சாவை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
பழனி அருகே குட்கா பதுக்கி வைத்து விற்பனை செய்த வாலிபர் கைது, 18 கிலோ குட்கா பறிமுதல்*திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே குட்கா பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக பழனி DSP.தனஞ்செயன் அவர்களுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில்பழனி தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் தங்க முனியசாமி, சார்பு ஆய்வாளர் கணேசன், காவலர்கள் இளம்பரிதி, கார்த்திக்ராஜா, ராம்நாத் ஊர்க்காவல் படை வீரர் மதன்குமார் ஆகியோர் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது R.R.மில் அருகே கடையில் பதுக்கி வைத்து குட்கா விற்பனை செய்த நெய்க்காரப்பட்டி சேர்ந்த முருகவேல் மகன் விக்னேஷ்(30) என்பவரை கைது செய்து கடையிலிருந்து ரூ.26 ஆயிரம் மதிப்புள்ள 18 கிலோ குட்காவை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
செய்தியாளர் மோகன் கணேஷ் திண்டுக்கல்.
பியூட்டி பார்லரில் பெண்களை மிரட்டி பணம் பறிப்பு ! போலீசார் இருவர் கைது !!
விளாத்திகுளம் சம்பவம் - டி என் ஏ சோதனை ! குற்றவாளிக்கு எதிராக முடிவுகள் - ஆதாரம் உறுதி !
பி டி ஆர் க்கு டஃப் கொடுக்கும் சுந்தர் சி ! வேட்பாளர் ஆனது எப்படி ?
ஆண்டிப்பட்டியில் அற்புதம்..! 3-வது முறையாக..! கோட்டையில் யார் கொடி..! கொண்டாடும் இணையவாசிகள்...!
மத்திய அமைச்சர் எல்.முருகன் வாகனம் சிறைபிடிப்பு..! பாஜக தொண்டர்கள் கடும் எதிர்ப்பு...!