by Vignesh Perumal on | 2025-09-21 03:24 PM
திண்டுக்கல்லில் நடைபெற்ற தி.மு.க. பொதுக்கூட்டத்தில் பங்கேற்றுவிட்டுத் திரும்பும்போது விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலக்கோட்டை வடக்கு ஒன்றியத்தைச் சேர்ந்த கட்சி நிர்வாகிகளை, தி.மு.க. கிழக்கு மாவட்ட செயலாளர் மற்றும் பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ.பி.செந்தில்குமார் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
திண்டுக்கல்லில், "ஒரணியில் தமிழ்நாடு; தமிழ்நாட்டைத் தலைகுனிய விடமாட்டேன்" என்ற தலைப்பில் தி.மு.க. சார்பில் ஒரு பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், நிலக்கோட்டை வடக்கு ஒன்றியத்தின் முருகத்தூரான்பட்டி பகுதியிலிருந்து ஏராளமான கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
கூட்டம் முடிந்து, அவர்கள் நிலக்கோட்டைக்குத் திரும்பிச் செல்லும் வழியில் சாலை விபத்தில் சிக்கினர். விபத்தில் காயமடைந்தவர்கள் உடனடியாக திண்டுக்கல்லில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுச் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விபத்து குறித்துத் தகவல் அறிந்த ஐ.பி.செந்தில்குமார் உடனடியாக மருத்துவமனைக்குச் சென்று, சிகிச்சை பெற்று வரும் கட்சி நிர்வாகிகளை நேரில் சந்தித்தார். அவர்களுக்கு ஆறுதல் கூறியதோடு, நிதியுதவியும் வழங்கினார்.
மேலும், மருத்துவர்களிடம், விபத்தில் காயமடைந்தவர்களுக்குத் தேவையான அனைத்து மருத்துவச் சேவைகளையும் சிறப்பான முறையில் வழங்குமாறு கேட்டுக் கொண்டார். இச்சம்பவம், கட்சித் தொண்டர்களுக்கு மத்தியில் ஐ.பி.செந்தில்குமார் மீது நல்லெண்ணத்தை ஏற்படுத்தியுள்ளது.
நிர்வாக ஆசிரியர்- பா.விக்னேஷ்பெருமாள்
பியூட்டி பார்லரில் பெண்களை மிரட்டி பணம் பறிப்பு ! போலீசார் இருவர் கைது !!
விளாத்திகுளம் சம்பவம் - டி என் ஏ சோதனை ! குற்றவாளிக்கு எதிராக முடிவுகள் - ஆதாரம் உறுதி !
பி டி ஆர் க்கு டஃப் கொடுக்கும் சுந்தர் சி ! வேட்பாளர் ஆனது எப்படி ?
ஆண்டிப்பட்டியில் அற்புதம்..! 3-வது முறையாக..! கோட்டையில் யார் கொடி..! கொண்டாடும் இணையவாசிகள்...!
மத்திய அமைச்சர் எல்.முருகன் வாகனம் சிறைபிடிப்பு..! பாஜக தொண்டர்கள் கடும் எதிர்ப்பு...!