by Vignesh Perumal on | 2025-09-21 02:56 PM
திண்டுக்கல் மாவட்டம், ரெட்டியார்சத்திரம் அடுத்த கொட்டாரப்பட்டி பிரிவு அருகேயுள்ள ஒரு தனியார் தோட்டத்தில் உள்ள கிணற்றில் குதித்து, 50 வயது பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.
வேடசந்தூர் கருப்பதேவனூரைச் சேர்ந்த பேபி (50) என்ற பெண், இன்று (செப்டம்பர் 21, 2025) கொட்டாரப்பட்டி பிரிவு அருகேயுள்ள ஒரு தனியார் தோட்டத்திற்கு வந்துள்ளார். திடீரென, அங்கிருந்த ஒரு கிணற்றில் அவர் குதித்துத் தற்கொலை செய்து கொண்டார்.
இந்தத் தகவலை அறிந்த அப்பகுதி மக்கள் தீயணைப்புத் துறைக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், கிணற்றில் மிதந்த பேபியின் உடலை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பேபியின் தற்கொலைக்கான காரணம் உடனடியாகத் தெரியவில்லை. இது குறித்துக் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆசிரியர்கள் குழு.....
மனைவியிடம் ஆபாச பேச்சு - அடங்காத ஆத்திரம் ! 5 ஆண்டுகள் கழித்து பழி தீர்த்த கொடூரம் !! சில மணிகளில் தூக்கிய போலீஸ் !!!
இன்ஸ்பெக்டருக்கு அரிவாள் வெட்டு ! சுட்டுப் பிடித்த போலீஸ் !!
அரசு ஊழியர்களுக்கு ஆப்பு ! த வெ க அரசு அதிரடி !!
ATM மையங்களில் கைவரிசை காட்டிய இளம் பெண் கைது! ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலீஸ் !!
மெகா போக்குவரத்து மாற்றம் - வாகன ஓட்டிகளே உஷார் !!