by admin on | 2025-09-21 11:58 AM
உலக அமைதி தினத்தை முன்னிட்டு தேனியில் விழிப்புணர்வு பேரணி
தேனி மாவட்டத்தில் உலக அமைதி தினத்தை முன்னிட்டு, உலக நாடுகள் ஒற்றுமையுடன் இணைந்து செயல்பட வேண்டும் என்பதையும், போர்களை நிறுத்தி சமாதானம் நிலைபெற வேண்டும் என்பதையும் வலியுறுத்தும் வகையில் விழிப்புணர்வு பேரணி சிறப்பாக நடத்தப்பட்டது.இந்த விழிப்புணர்வு பேரணி தேனி புதிய பேருந்து நிலையத்தில் இருந்து துவங்கி, பழைய பேருந்து நிலையம் வரை நடைபெற்றது. பேரணியில் பல்வேறு சமூக அமைப்புகள், இளைஞர்கள், மாணவர்கள், பொதுமக்கள் என பெருமளவினர் இணைந்து கொண்டு அமைதி, ஒற்றுமை, சகோதரத்துவம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.பேரணியைத் தேனி மாவட்ட ஆட்சியர் உயர்திரு ரஞ்ஜீத் சிங் இ.ஆ.ப அவர்கள் கலந்து கொண்டு தொடக்கி வைத்தார். தனது உரையில் உலக நாடுகள் ஒற்றுமையுடன் இணைந்து செயல்பட்டால்தான் மனிதகுலம் முன்னேற்றம் அடையும் என்றும், போர் எப்போதும் அழிவையே தரும் என்றும் வலியுறுத்தினார்.
இந்து எழுச்சி முன்னணி சார்பாக, மாவட்ட செயலாளர் திரு இராமமூர்த்தி ஜீ அவர்கள் தலைமையில் பேரணி நடைபெற்றது. இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் திரு சுப்பையா ஜீ, தேனி நகரத் தலைவர் சிவராமன் ஜீ, தேனி நகர அமைப்பாளர் திரு கனகுபாண்டி ஜீ, நகர பொருளாளர் திரு நாகராஜ் ஜீ, நகர செயலாளர் புயல் அய்யப்பன் ஜீ, நகர துணை செயலாளர்கள் திரு ரமேஷ் ஜீ, திரு ராமகிருஷ்ணன் ஜீ, நகர செயற்குழு உறுப்பினர்கள் திரு இராமநாதன் ஜீ, திரு ரமணா ஜீ ஆகியோர் பங்கேற்று பேரணியை சிறப்பித்தனர்.மேலும் எங்களுடன் இணைந்து பாரதீய ஃபார்வர்டு பிளாக் மாநில அமைப்பு செயலாளர் திரு MPS முருகன் அவர்கள் கலந்து கொண்டது நிகழ்வின் முக்கியத்துவத்தை மேலும் உயர்த்தியது.இந்த பேரணியின் மூலம் உலக மக்களிடையே அமைதி, சகிப்புத் தன்மை, நட்பு, அன்பு ஆகிய உயர்ந்த மதிப்புகளை பரப்ப வேண்டும் என்ற செய்தி வலியுறுத்தப்பட்டது..
T.Muthukkamatchi evidence editor. 9842337244
தேனியில் முதல்வர் விஜய் பிறந்தநாள் விழா...!!!
வேடசந்தூரில் போலீஸ் அதிரடி நடவடிக்கை....!
வீட்டில் குட்கா...! போலீஸ் அதிரடி பறிமுதல்...! கைது....!
போதையில் தாறுமாறாக கார் ஓட்டி விபத்து ! சஸ்பெண்ட் கமிஷனர் கைது.!!
மனைவி, கள்ளக்காதலனுக்கு சரமாரி அரிவாள் வெட்டு - கணவன் வெறிச்செயல் ! தப்பிய கணவனுக்கு போலீஸ் வலைவீச்சு !!