by Vignesh Perumal on | 2025-09-20 04:41 PM
"சபரிமலை என்பது சாதி, மதங்களை கடந்து மனிதநேயத்துடன் மக்கள் ஒன்றுகூடும் ஒரு புனிதத் தலம். ஐயப்பனை மக்கள் எளிமையாக வழிபட வைப்பதே மாநாட்டின் நோக்கம்" என்று உலக ஐயப்ப பக்தர்கள் மாநாட்டில் கேரள முதல்வர் பினராயி விஜயன் பேசினார்.
சபரிமலை வளர்ச்சிக்காக ஒரு மாஸ்டர் பிளான் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும், அதன் மூலம் பக்தர்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளும் மேம்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
சபரிமலைக்கு வரும் பக்தர்களின் வசதிக்காகப் புதிய ரயில் பாதை அமைக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்த மாநாட்டில், சபரிமலையை ஒரு உலகத் தரம் வாய்ந்த ஆன்மிகத் தலமாக மேம்படுத்துவது குறித்தும் விவாதிக்கப்பட்டது. மேலும், ஐயப்பன் கோயில் வருமானம் தொடர்பான பல்வேறு விவகாரங்கள் குறித்தும் இந்தக் கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது.
நிர்வாக ஆசிரியர்- பா.விக்னேஷ்பெருமாள்
மனைவியிடம் ஆபாச பேச்சு - அடங்காத ஆத்திரம் ! 5 ஆண்டுகள் கழித்து பழி தீர்த்த கொடூரம் !! சில மணிகளில் தூக்கிய போலீஸ் !!!
இன்ஸ்பெக்டருக்கு அரிவாள் வெட்டு ! சுட்டுப் பிடித்த போலீஸ் !!
அரசு ஊழியர்களுக்கு ஆப்பு ! த வெ க அரசு அதிரடி !!
ATM மையங்களில் கைவரிசை காட்டிய இளம் பெண் கைது! ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலீஸ் !!
மெகா போக்குவரத்து மாற்றம் - வாகன ஓட்டிகளே உஷார் !!