| | | | | | | | | | | | | | | | | | |
தமிழ்நாடு தமிழ்நாடு

"மக்களின் மனதில் நீங்காத இடம் பிடித்தவர்"...! முதலமைச்சர் இரங்கல்...!

by Vignesh Perumal on | 2025-09-19 11:54 AM

Share:


"மக்களின் மனதில் நீங்காத இடம் பிடித்தவர்"...! முதலமைச்சர் இரங்கல்...!

பிரபல திரைப்பட மற்றும் தொலைக்காட்சி கலைஞர் ரோபோ சங்கர் (46) இன்று (செப்டம்பர் 19, 2025) காலமானார். அவரது மறைவு, தமிழ்த் திரையுலகிலும், சின்னத்திரையிலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது மறைவுக்குத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட இரங்கல் செய்தியில், "திரைக்கலைஞர் ரோபோ சங்கர் மறைவெய்திய செய்தியறிந்து வருத்தமுற்றேன். மேடைகளில் தொடங்கி, சின்னத்திரை, வெள்ளித்திரை எனத் தனது கலைப் பயணத்தை விரிவுபடுத்தி, தமிழ்நாட்டு மக்களை மகிழ்வித்தவர் ரோபோ சங்கர்" என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், "அவரது திடீர் மறைவு கலையுலகிற்கு ஒரு பேரிழப்பு. அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், கலையுலகைச் சேர்ந்தவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்" என்றும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.


மேடை நாடகங்களில் தனது கலைப் பயணத்தைத் தொடங்கிய ரோபோ சங்கர், பிரபலமான தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். பின்னர், திரைப்படங்களில் காமெடி, குணச்சித்திர வேடங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் நீங்காத இடம்பிடித்தார். அவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் தலைவர்களும், திரையுலக பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.



நிர்வாக ஆசிரியர்- பா.விக்னேஷ்பெருமாள்

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment