by Vignesh Perumal on | 2025-09-10 01:20 PM
நேபாளத்தில் நடந்து வரும் போராட்டங்களுக்கு மத்தியில், முன்னாள் பிரதமர் ஜலநாத் கானாலின் மனைவி ராஜ்யலட்சுமி சித்ரக்கர் (65) போராட்டக்காரர்களால் வைக்கப்பட்ட தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.
நேபாளம் தற்போது அரசியல் ஸ்திரத்தன்மையின்மையால் பல்வேறு போராட்டங்களைச் சந்தித்து வருகிறது. இந்தச் சூழலில், காட்மாண்டுவின் தல்லு பகுதியில் அமைந்துள்ள முன்னாள் பிரதமர் ஜலநாத் கானாலின் இல்லத்திற்கு நேற்று (செப்டம்பர் 09, 2025) இரவு சில போராட்டக்காரர்கள் தீ வைத்துள்ளனர்.
அப்போது வீட்டில் இருந்த அவரது மனைவி ராஜ்யலட்சுமி சித்ரக்கர், தீயில் சிக்கி பலத்த தீக்காயமடைந்தார். உடனடியாக மீட்கப்பட்டு, அருகில் உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். எனினும், சிகிச்சை பலனின்றி இன்று (செப்டம்பர் 11, 2025) அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
முன்னாள் பிரதமரின் மனைவி உயிரிழந்த சம்பவம், நேபாளத்தில் ஏற்கனவே பற்றி எரிந்து கொண்டிருக்கும் அரசியல் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது. இதுதொடர்பாக காவல்துறை வழக்குப் பதிவு செய்து, தீ வைப்புச் சம்பவத்தில் ஈடுபட்டவர்களைத் தேடி வருகிறது.
நிர்வாக ஆசிரியர்- பா.விக்னேஷ்பெருமாள்
தேனியில் முதல்வர் விஜய் பிறந்தநாள் விழா...!!!
வேடசந்தூரில் போலீஸ் அதிரடி நடவடிக்கை....!
வீட்டில் குட்கா...! போலீஸ் அதிரடி பறிமுதல்...! கைது....!
போதையில் தாறுமாறாக கார் ஓட்டி விபத்து ! சஸ்பெண்ட் கமிஷனர் கைது.!!
மனைவி, கள்ளக்காதலனுக்கு சரமாரி அரிவாள் வெட்டு - கணவன் வெறிச்செயல் ! தப்பிய கணவனுக்கு போலீஸ் வலைவீச்சு !!