| | | | | | | | | | | | | | | | | | |
கிரைம் Crime

ரூபாய் 10 கோடி மோசடி பெண் கைது...!!!

by admin on | 2025-09-10 03:43 AM

Share:


ரூபாய் 10 கோடி மோசடி பெண் கைது...!!!

*திண்டுக்கல்லை சேர்ந்த வியாபாரியிடம் இனிப்பு வகை மக்காச்சோளம் அனுப்புவதாக கூறி ரூ.10 கோடியே 73 லட்சத்து 67 ஆயிரத்து 906 பணம் மோசடி - பெண் கைது*


திண்டுக்கல், கோபாலசமுத்திரம் பகுதியை சேர்ந்த ராஜ்குமார்(48) இவர் மக்காச்சோளத்தை வாங்கி விற்கும் தொழில் செய்து வருகிறார்இந்நிலையில் சேலத்தை சேர்ந்த  சரவணன் மனைவி சங்கீதா(38) என்பவர் இனிப்பு வகை மக்காச்சோளத்தை வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்வதாக ராஜ்குமாரிடம் தெரிவித்தார். ராஜ்குமார் தனக்கும் இனிப்பு வகை மக்காச்சோளம் வேண்டும் என்று சங்கீதாவிடம் கேட்டுள்ளார்அப்போது மக்காச்சோளத்தை வழங்கும் விவசாயிகளின் வங்கி கணக்கு விவரங்களை தருவதாகவும் அதில் பணத்தை செலுத்தினால் உடனடியாக மக்காச்சோளத்தை அனுப்பி வைப்பதாக சங்கீதா தெரிவித்தார். ராஜ்குமார் சங்கீதா அனுப்பிய வங்கி கணக்குகளில் ரூ.10 கோடியே 73 லட்சத்து 67 ஆயிரத்து 906 செலுத்தினார்.சங்கீதா மக்காச்சோளத்தை அனுப்பவில்லை சங்கீதா பணத்தை பெற்றுக் கொண்டு கூட்டு சதி செய்தது குறித்து மாவட்ட எஸ்பி பிரதீப் அவர்களிடம் ராஜ்குமார் புகார் அளித்ததை தொடர்ந்து மாவட்ட குற்றப்பிரிவு டிஎஸ்பி குமரேசன் தலைமையிலான போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.


தி.முத்துக்காமாட்சி வெளியீட்டாளர். 9842337244

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment