| | | | | | | | | | | | | | | | | | |
அரசியல் ADMK

அதிமுகவில் இருந்து வெளியில் சென்றவர்களை ஒருங்கிணைக்க வேண்டும்..!!!

by admin on | 2025-09-05 04:07 PM

Share:


அதிமுகவில் இருந்து வெளியில் சென்றவர்களை  ஒருங்கிணைக்க வேண்டும்..!!!

*செங்கோட்டையன் பரபரப்பு முழு பேட்டி*அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்களை அழைத்து வர வேண்டும்... அதுவரைவெற்றிப்பயணத்தில் கலந்து கொள்ள மாட்டேன்.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி


அதிமுகவின் மூத்த நிர்வாகிகளில் ஒருவரும், முன்னாள் அமைச்சருமான கே.ஏ.செங்கோட்டையன் 9 முறை சட்டமன்ற உறுப்பினராகவும், மூன்று முறை எம்.எல்.ஏ.,வாகவும் இருந்தவர். அவர் மனம் திறந்து பேசப்போவதாக கூறியதை அடுத்து அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. வேறு கட்சிகளுக்கு செல்லப்போவதாகவும், ஒருங்கிணைந்த அதிமுக பற்றி பேசப்போவதாகவும் பல்வேறு பேச்சுகள் நிலவின.


இந்த நிலையில் கே.ஏ.செங்கோட்டையன் செய்தியாளர்களை இன்று சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், ‘1972 ல் எம்.ஜி.ஆர். அதிமுகவை தொட்ங்கினார். 1973ல் அதிமுக சார்பில் திண்டுக்கல் இடைத்தேர்தலில் மாயத்தேவர் போட்டியிட்ட போது மாபெரும் வெற்றி பெற்றார். கோவையில் அப்போது நடைபெற்ற பொதுக்குழுவில், அரங்கநாயகம் தலைவர், டிருப்பூர் மணி மாறன் செயலாளர், என்னை பொருளாளராக நியமித்து இருந்தார். நாங்கள் முழுமையாக நின்று செயல்படுத்தி எம்.ஜி.ஆரை அழைத்து சென்றபோது, மகிழ்ச்சி தெரிவித்தார். 1977ல் நான் கோபியில் போட்டியிடுற போது, சத்தியமங்கலத்தில் என்னை எம்.ஜி.ஆர் நிற்க சொன்னார். அங்கு எனக்கு புதிய இடம் என்று கூறினேன், தனது பெயரை உச்சரிக்க சொன்னார். கோவை செழியன் போன்றவர்கள் இயக்கத்தில் இருந்து வெளியே சென்றபோது இல்லத்துக்கே சென்று வாருங்கள் என்று அழைத்தார். 


எம்.ஜி.ஆரி பொறுத்தவரை மாமேதையாக, மக்கள் போற்றும் தலைவராக இருந்தார். 10 ஆண்டுகாலம் சிறந்த ஆட்சியை தந்தார். பசிப்பிணி போக்கும் சத்துணவு வழங்கினார். தமிழகத்துக்கு பெருமை சேர்க்கும் முதல்வராக இருந்தார்.  அவரது மறைவுக்கு பிறகு ஜெயலலிதா முதல்வராக பொறுப்பேற்றார். தலைவருக்கு பின்னால் அவரது பின்னால் திரண்டோம். மக்களிடத்தில் செல்வாக்கு மிக்க, ஆளுமை மிக்க தலைமை நீங்கள் தான் வரவேண்டும் என்று அழைத்தோம். அவர் தமிழகத்தில் சிறந்த ஆட்சியை தந்தார். உலக நாடுகள் திரும்பிப்பார்க்கும் அளவுக்கு சிறப்பாக முதல்வராக செயல்பட்டார். 5 முறை முதல்வராக இருந்து ஏழை மக்களால் போற்றப்படும் தலைவராக இருந்தார். ஆன்மிகவாதிகளும், திராவிடவாதிகளும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தலைமையாக ஜெயலலிதா இருந்தார். தி.க. தலைவர் கூட ஜெயலலிதாவுக்கு சமூக நீதி காத்த வீராங்கனை என்ற பட்டம் வழங்கினார். இந்த இயக்கம் ஏழைகளுக்கான இயக்கமாக இருந்தது.ஜெயலலிதா மறைந்து ஓராண்டுக்கு பிறகு இந்த இயக்கத்தில் பல்வேறு சோதனைகள் வருகிறபோது, திருமதி சசிகலா அவர்களை பொதுச்செய்லாளராக நியமித்தோம். மீண்டும் முதல்வரை நியமிக்க வேண்டி வந்தபோது முன்னாள் முதல்வரை நியமித்தோம். இந்த இயக்கத்தில் பல்வேறு தடுமாற்றங்கள் வருகிற போது, என்னுடைய பணிகளை ஜெயலலிதா பாராட்டினார்.


இந்த இயக்கத்துக்காக அர்ப்பணித்துக்கொண்டு பல பணிகளை நான் ஆற்றி இருக்கிறேன். தமிழகம் எப்படி இருக்க வேண்டும்? மக்கள் எப்படி செழிப்போடு வாழ வேண்டும்? இந்த இயக்கத்தில் தொண்டர்கள் சிறப்பாக வாழ தியாகம் செய்ய தயாராக இருந்தேன். அப்போது இரண்டு வாய்ப்புகள் எனக்கு கிடைத்தது. இயக்கம் உடைந்து விடக்கூடாது என்ற நோக்கத்துடன் செயல்பட்டேன். இதை நம்பி இருக்கிற எதிர்காலத்தை நோக்கி பயணம் செய்ய இந்த இயக்கம் சிறப்பாக செயல்பட வேண்டும்.2016க்கும் பிறகு தொடர்ந்து தேர்தல்களை சந்திக்கிறோம். 1991ல் ஜெயலலிதா பேசுகையில், என்னருகே இருப்பவர்கள் எங்கிருந்தார்கள். எப்படி என்னை விமர்சனம் செய்தார்கள்? ஆனால் அனைவரையும் அரவணைத்து செல்வதாக சட்டமன்றத்தில் பேசினார்.  2016ல் ஆட்சிக்கட்டிலில் அமர்ந்தோம், 2019 தேர்தல், 21 தேர்தல், உள்ளாட்சி தேர்தல் சந்திக்கிற போது பிரச்சினைகள் உருவானது. 2024 தேர்தலை சந்தித்தோம். தேர்தல் முடிந்த பிறகு கழக பொதுச்செயலாளரை சந்தித்தோம். கழகம் தொய்வாக இருக்கிறது. அனைவரையும் ஒருங்கிணைக்க வேண்டும் என்று நத்தம் விஸ்வநாதன், எஸ்.பி.வேலுமணி, தங்கமணி உள்ளிட்ட 6 பேரும் சந்தித்து பேசினோம். 


கருத்துக்களை கேட்ட அவர், அதை ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் இல்லை. இதை எதற்காக சொல்கிறோம் என்றால், வெளியில் செனறவர்களை அரவணைத்தால் மட்டும்  தான் வெற்றி பெற முடியும். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவை விட செல்வாக்கு பெற்ற தலைவர்கள் இல்லை. அவர்கள் பிரசாரத்தில் லட்சக்கணக்கில் கலந்து கொண்டார்கள். ஆனாலும் வெற்றி அவசியம் என்று வெளியே சென்றவர்களை அழைத்து, தேமுதிகவை அழைத்து வென்றார்.ஆகவே வெளியே சென்றவர்களை நாம் அரவணைக்க வேண்டும். அவர் வைக்கின்ற வேண்டுகோள் எந்த கண்டிஷனும் இல்லை என்கிறார், பல்வேறு மேடையிலும் கருத்துகளை சொல்கிறார். எல்லோரும் என்ன செய்வதென்று தெரியாமல் தவிக்கிறோம். என் நிலையில் தான் எல்லோரும் இருக்கிறார்கள். எல்லோரும் ஒன்றாக இணைந்து செயல்படுவதற்கு இந்த இயக்கம்தான் சகோதர பாசத்தை உருவாக்கி இருக்கிறது. மக்கள் ஆட்சி மாற்றம் எதிர்பார்க்கிறார்கள். அதை உருவாக்க நாம் வெளியில் சென்றவர்களை அழைத்து வந்து செயல்படுத்த வேண்டும்.

நல்ல ஆட்சியை தமிழகத்தில் வரவைக்க, எல்லோரையும் அழையுங்கள் என்று கூறுகிறேன். அவர் எந்த பொறுப்பும் தேவையில்லை என்று சொல்வது, மக்கள் நினைப்பது எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆட்சி மலர வேண்டும். இதை விரைந்து செய்ய வேண்டும். விரைந்து செய்து முடித்தால் தான் தேர்தல் களத்தில் நிற்க முடியும்.அது செய்ய முடியவில்லை என்றால் இந்தமன நிலையில் இருக்கிற அனைவரும் சேர்ந்து அதை செயல்படுத்துவோம். கொடுக்கப்பட்ட கால அவகாசத்தில் அதை செய்யவில்லை என்றால் மக்கள் எதிர்பார்ப்பு நிறைவேறாது.

இதற்கு முடிவு வந்தால் தான் இவரது வெற்றிப்பயணத்தில் கலந்து கொள்வேன். தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பதிலளித்த அவர், வருகின்ற கூட்டம் வேறு, பலவேறு தரப்பட்ட தொண்டர்களின் மனநிலை வேறு. யாரை இணைப்பது என்பதை பொதுச்செயலாளர் முடிவு செய்யலாம். வெளியே சென்றவர் அதிமுகவில் முக்கிய பொறுப்பில் இருப்பவர். அவரை இணைக்க வேண்டும் என்று சொல்கிறேன். தென்மாவட்டத்தில் பார்த்தால் உங்களுக்கு தெரியும்.  10 நாட்களில் அதற்கான முயற்சி எடுக்க வேண்டும். ஆறு பேர் பேசியதற்கு பிறகு, தலைமை இதுகுறித்து எங்களை அழைத்து பேச முன்வரவில்லை. எல்லோரையும் ஒருங்கிணைக்கிற போது தான் கட்சி வலுவாகும்.

எனக்கு நெருங்கிய நண்பர்களை கலந்து கொண்டு அடுத்தகட்ட முடிவு செய்வேன். நம்முடைய அமைச்சர்கள் பாரதப்பிரதமரையே சந்தித்து இருக்கிறார். என்னைத்தான் விளம்பரப்படுத்தி விட்டீர்கள். இயக்கத்துக்காக  எந்த தியாகத்தையும் செய்ய நான் தயாராக இருக்கிறேன். நூறாண்டுகாலம் இந்த இயக்கம் ஆளும் என்று ஜெயலலிதா சொல்லி இருக்கிறார். அதற்கான பணிகளை தொடங்கி இருக்கிறேன். என்றார். பேட்டியின் முன்னாள் எம்.பி., சத்யபாமா உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.


தி முத்துக்காமாட்சி ஆசிரியர் 9842337244

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment