by Vignesh Perumal on | 2025-09-01 02:14 PM
சென்னை மாநகராட்சியில் உள்ள இரண்டு மண்டலங்களில் (மணலி மற்றும் அம்பத்தூர்) தூய்மைப் பணிகளை தனியார் நிறுவனங்களுக்கு வழங்குவதற்கு எதிரான வழக்கில், சென்னை உயர் நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு, தனி நீதிபதியின் உத்தரவுக்கு தடை விதிக்க மறுத்துவிட்டது.
இந்த வழக்கில், தூய்மைப் பணியாளர்களுக்கு எதிரான தனியார்மயமாக்கல் முடிவை எதிர்த்து உழைப்போர் உரிமை இயக்கம் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
தூய்மைப் பணிகளை தனியார் மயமாக்குவது தொடர்பான வழக்கு தொழிலாளர் நல நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. எனவே, தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும்.
ஒப்பந்தம் பெற்ற தனியார் நிறுவனம், தூய்மைப் பணியாளர்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த தினசரி ஊதியமான ரூ.761-ஐ தொடர்ந்து வழங்குவதற்கு ஒப்புதல் அளித்துள்ளது. ஒப்பந்தம் தொடர்பான மேல்முறையீட்டுக்குப் பிறகு, பணியில் சேர்ந்த 800 பணியாளர்களும் வேலைக்கு வர மறுக்கின்றனர். அவர்கள் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும். இல்லையெனில், வேறு நபர்களை நியமிக்க நேரிடும்.
இந்த வாதங்களைக் கேட்டறிந்த நீதிபதிகள், தனி நீதிபதியின் உத்தரவுக்கு தடை விதிக்க மறுத்து, விசாரணையை ஒத்திவைத்தனர்.
ஆசிரியர்கள் குழு.....
தங்கம் விலை குறைந்தது..! மக்கள் மகிழ்ச்சி...!
இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை...! பதறிப்போன உறவினர்கள்...!
பியூட்டி பார்லரில் பெண்களை மிரட்டி பணம் பறிப்பு ! போலீசார் இருவர் கைது !!
விளாத்திகுளம் சம்பவம் - டி என் ஏ சோதனை ! குற்றவாளிக்கு எதிராக முடிவுகள் - ஆதாரம் உறுதி !
பி டி ஆர் க்கு டஃப் கொடுக்கும் சுந்தர் சி ! வேட்பாளர் ஆனது எப்படி ?