by Vignesh Perumal on | 2025-08-24 11:01 AM
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துகளைக் குறைக்கும் நோக்கில், பழனி போக்குவரத்து காவல்துறையினர் புதிய போக்குவரத்து மாற்றங்களை அறிமுகப்படுத்தியுள்ளனர். இது தொடர்பான அறிவிப்பை பழனி டி.எஸ்.பி. தனஞ்செயன் நேற்று பத்திரிக்கைச் செய்தியாக வெளியிட்டார்.
புதிய திட்டத்தின்படி, பழனி நகரில் உள்ள முக்கியச் சாலைகள் ஒருவழிப் பாதைகளாக மாற்றப்பட்டுள்ளன. எந்தப் பகுதி வாகனங்கள் எந்தப் பாதையில் செல்ல வேண்டும் என்பதை விளக்கும் வகையில், பல்வேறு இடங்களில் அம்புக்குறி கொண்ட அறிவிப்புப் பலகைகள் (ஃப்ளெக்ஸ் போர்டுகள்) வைக்கப்பட்டுள்ளன.
பழனி டி.எஸ்.பி. தனஞ்செயன் அவர்களின் ஆலோசனையின்படி, போக்குவரத்து காவல் ஆய்வாளர் ஜெய்சிங் தலைமையில் காவல்துறையினர் தீவிரமாக இந்த நடவடிக்கைகளைச் செயல்படுத்தி வருகின்றனர். அவர்கள் வாகன ஓட்டுநர்களிடம் நேரில் சென்று போக்குவரத்து மாற்றங்கள் குறித்து விளக்கி வருகின்றனர்.
இந்த மாற்றத்தின் முக்கிய நோக்கம், பழனி முருகன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பது. மேலும், சாலைகளில் ஏற்படும் விபத்துகளைத் தடுப்பதும் இந்தத் திட்டத்தின் மற்றொரு முக்கிய நோக்கமாகும்.
இந்த புதிய போக்குவரத்து மாற்றங்கள், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டுநர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன.
செய்தி-கதிரேசன் திண்டுக்கல்.
பான் கார்டு - புதிய நடைமுறை ! புதிய மாற்றங்கள் - உஷார் !!
மதசார்பற்ற கூட்டணி ஆலோசனைக் கூட்டம்....!!!
பறக்கும் படை அதிரடி...! 106 மதுபாட்டில்கள் பறிமுதல்..! திடுக்கிடும் தகவல்...!
மதுரை சித்திரை திருவிழாவின் தொன்மைக்கு சங்க இலக்கியத்தில் சான்று ★ எழுத்தாளர் நிக்கோலஸ் பிரான்சிஸ் புகழாரம்
கருத்தரிப்பு சிகிச்சையிலும் வந்துவிட்டது ஏ.ஐ., தொழில்நுட்பம் ★ சென்னை மருத்துவ கருத்தரங்கில் தகவல்