| | | | | | | | | | | | | | | | | | |
கிரைம் Crime

கள்ளக்காதல் விவகாரம்..! போலீசார் பதிலளிக்க...! கோர்ட் அதிரடி உத்தரவு...!

by Vignesh Perumal on | 2025-08-12 02:38 PM

Share:


கள்ளக்காதல் விவகாரம்..! போலீசார் பதிலளிக்க...! கோர்ட் அதிரடி உத்தரவு...!

2018-ஆம் ஆண்டு, திருமணத்தை மீறிய உறவு காரணமாக தனது இரண்டு குழந்தைகளைக் கொலை செய்த வழக்கில், குற்றவாளியான குன்றத்தூர் அபிராமிக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து, அபிராமி சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.

இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், அபிராமியின் மேல்முறையீட்டு மனுவுக்குப் பதிலளிக்குமாறு காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது. கடந்த 2018-ல், அபிராமி தனது இரண்டு குழந்தைகளுக்கும் பாலில் விஷம் வைத்துக் கொலை செய்தார். இந்த வழக்கில், அபிராமி மற்றும் அவரது கள்ளக்காதலன் மீனாட்சி சுந்தரத்திற்கு சாகும் வரை சிறை தண்டனை விதித்து காஞ்சிபுரம் மகிளா விரைவு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.


இந்தத் தீர்ப்பை எதிர்த்து அபிராமி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு, தற்போது உயர்நீதிமன்றத்தின் பரிசீலனையில் உள்ளது.



WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment