by Vignesh Perumal on | 2025-08-11 06:29 AM
தேனி மாவட்டத்தில் குற்றச் சம்பவங்களைக் குறைக்கவும், சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகளுக்கு விரைந்து தீர்வு காணவும், 16 புதிய இரு சக்கர ரோந்து வாகனங்களை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் டாக்டர் சிநேகாப்ரியா, இ.கா.ப., அவர்கள் நேற்று (ஆகஸ்ட் 10, 2025) தொடங்கி வைத்தார். மாவட்டக் காவல் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில், ரோந்துப் பணிக்காக நியமிக்கப்பட்ட காவலர்களுக்கு இந்த வாகனங்களை அவர் வழங்கினார்.
இந்த புதிய ரோந்து வாகனங்கள், ஒவ்வொரு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளிலும் ரோந்துப் பணியில் ஈடுபடும். இதன் மூலம், பொதுமக்களிடமிருந்து வரும் புகார்களுக்கு உடனடியாகச் சென்று தீர்வு காண முடியும். மேலும், சாலை விபத்துக்கள், சட்ட ஒழுங்கு பிரச்சினைகள் மற்றும் குற்றச் சம்பவங்களின்போது, ரோந்துப் பணியில் உள்ள காவலர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்று தேவையான நடவடிக்கைகளை எடுப்பார்கள்.
பொதுமக்கள் தங்களுக்கு ஏற்படும் பிரச்சினைகள் குறித்து காவல்துறையிடம் புகார் அளிக்க, பின்வரும் எண்களைப் பயன்படுத்தலாம்: அதாவது, ஹலோ போலீஸ் (Hello Police) 887098510 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம். மேலும் கட்டணமில்லா இலவச தொலைபேசி எண் 100 மற்றும்
மாவட்டக் காவல் கட்டுப்பாட்டு அறை எண் 04546 - 250100 அழைத்து குறைகளைக் தெரிவிக்கலாம்.
மேற்கண்ட எண்களைத் தொடர்பு கொள்வதுடன், அந்தந்தப் பகுதி காவல் நிலையங்களையும் நேரடியாகத் தொடர்பு கொண்டு தங்கள் புகார்களைப் பதிவு செய்யலாம். இதன் மூலம், காவல்துறை உதவிகளை விரைந்து பெற்று, பிரச்சினைகளுக்குத் தீர்வு காணலாம் என மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் தெரிவித்தார். இந்தப் புதிய ரோந்து வாகனங்கள் மூலம், தேனி மாவட்டத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நிர்வாக ஆசிரியர் - பா.விக்னேஷ்பெருமாள்
தேனியில் முதல்வர் விஜய் பிறந்தநாள் விழா...!!!
வேடசந்தூரில் போலீஸ் அதிரடி நடவடிக்கை....!
வீட்டில் குட்கா...! போலீஸ் அதிரடி பறிமுதல்...! கைது....!
போதையில் தாறுமாறாக கார் ஓட்டி விபத்து ! சஸ்பெண்ட் கமிஷனர் கைது.!!
மனைவி, கள்ளக்காதலனுக்கு சரமாரி அரிவாள் வெட்டு - கணவன் வெறிச்செயல் ! தப்பிய கணவனுக்கு போலீஸ் வலைவீச்சு !!