| | | | | | | | | | | | | | | | | | |
கிரைம் Crime

சிறை கைதி விவகாரம்...! சிறை காவலர்கள் மீது வழக்கு பதிவு...!

by Vignesh Perumal on | 2025-08-10 10:56 AM

Share:


சிறை கைதி விவகாரம்...! சிறை காவலர்கள் மீது வழக்கு பதிவு...!

மதுரையைச் சேர்ந்த ஹரிஹரன் என்ற தண்டனைக் கைதி, திருச்சி மத்திய சிறையில் தாக்கப்பட்டதாகக் குற்றம் சாட்டப்பட்ட வழக்கில், துணைச் சிறை அலுவலர் மற்றும் சிறைக் காவலர்கள் உட்பட 22 பேர் மீது வழக்குப் பதிவு செய்ய உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரையைச் சேர்ந்த ஹரிஹரன், ஒரு வழக்கில் தண்டனை பெற்று திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர், கடந்த ஜூன் 26 அன்று சிறையில் தாக்கப்பட்டதாகவும், அதனால் கடுமையான காயங்கள் ஏற்பட்டதாகவும் அவரது குடும்பத்தினர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தனர்.

விசாரணையில், சிறை அதிகாரிகள் தாக்கியதில் ஹரிஹரனுக்குக் காயங்கள் ஏற்பட்டதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். இதையடுத்து, சிறையில் இருக்கும் கைதிகள் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த வழக்கு தொடர்பாக, நீதிபதி விசாரணைக்கு உத்தரவிட்டதையடுத்து, கே.கே. நகர் காவல் துறையினர், சிறைத் துறையினர் மீது வழக்குப் பதிவு செய்தனர். துணைச் சிறை அலுவலர் மணிகண்டன், தலைமைக் காவலர் அருண் குமார் மற்றும் 20 சிறைக் காவலர்கள் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கில், சிறைத் துறையினர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதால், விசாரணை தீவிரமடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.





நிர்வாக ஆசிரியர் - பா.விக்னேஷ்பெருமாள்

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment