by Vignesh Perumal on | 2025-08-08 01:06 PM
கடந்த சில நாட்களாகவே ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டு வந்த தங்கத்தின் விலை, இன்று (ஆகஸ்ட் 8, 2025) மீண்டும் அதிகரித்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹560 உயர்ந்து, ₹75,760-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு கிராம் (22 காரட்) இன்று ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ₹70 உயர்ந்து, ₹9,470-க்கு விற்பனை ஆகிறது. ஒரு சவரன் (22 காரட்) நேற்றைய விலையை விட ₹560 அதிகரித்து, ஒரு சவரன் தங்கம் ₹75,760-க்கு விற்பனையாகிறது.
தங்கத்தின் விலை உயர்ந்தாலும், வெள்ளியின் விலையில் எந்த மாற்றமும் இல்லை. ஒரு கிராம் வெள்ளி ₹127-க்கும், ஒரு கிலோ வெள்ளி ₹1,27,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
சர்வதேச சந்தையில் நிலவும் பொருளாதார சூழல், அமெரிக்க டாலரின் மதிப்பு, மற்றும் முதலீட்டாளர்களின் அணுகுமுறை போன்ற பல்வேறு காரணங்களால் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இந்த விலை உயர்வு, தங்க நகை பிரியர்கள் மற்றும் இல்லத்தரசிகளுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது.
நிர்வாக ஆசிரியர் - பா.விக்னேஷ்பெருமாள்