| | | | | | | | | | | | | | | | | | |
கிரைம் Crime

மனைவிக்கு அரிவாள் வெட்டு...! போலீசார் தீவிர விசாரணை....!

by Vignesh Perumal on | 2025-08-07 12:08 PM

Share:


மனைவிக்கு அரிவாள் வெட்டு...! போலீசார் தீவிர விசாரணை....!

வடமதுரை அருகே ரெட்டியபட்டி கிராமத்தில், பழனிசாமி (45) மற்றும் அவரது மனைவி காளியம்மாள் (40) ஆகிய இருவரை, அதே பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் அரிவாளால் வெட்டியதில் படுகாயம் அடைந்தனர்.

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அடுத்த ரெட்டியபட்டி இந்திரா காலனியைச் சேர்ந்த பழனிசாமி, அவரது மனைவி காளியம்மாள் ஆகிய இருவரும் இன்று வீட்டில் இருந்தபோது, அதே பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் அவர்களுடன் தகராறில் ஈடுபட்டார். தகராறு முற்றிய நிலையில், மணிகண்டன் அரிவாளால் இருவரையும் சரமாரியாக வெட்டினார்.

இதில், பலத்த காயமடைந்த கணவன், மனைவி இருவரும் உடனடியாக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்த வடமதுரை போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். தாக்குதலில் ஈடுபட்ட மணிகண்டன் தலைமறைவாகிவிட்ட நிலையில், அவரைத் தேடி வருகின்றனர். முன்விரோதம் காரணமாக இந்தச் சம்பவம் நடந்ததா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.




நிர்வாக ஆசிரியர் - பா.விக்னேஷ்பெருமாள்

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment