by Vignesh Perumal on | 2025-08-07 11:38 AM
செம்பட்டி அருகே ஆட்டோ மீது அரசுப் பேருந்து மோதிய விபத்தில், ஆட்டோவில் பயணம் செய்த பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், மூன்று பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு பெத்தானியபுரத்தைச் சேர்ந்த ராஜலட்சுமி (29), உடல்நலக் குறைவு காரணமாக சிகிச்சைக்காக ஒட்டன்சத்திரம் செல்வதற்காக ஆட்டோவில் பயணம் செய்துகொண்டிருந்தார். அவருடன் அவரது மாமனார் ராமன், மாமியார் கருப்பாயி மற்றும் கணவரின் தம்பி ஜெயராம் ஆகியோர் இருந்தனர்.
செம்பட்டியை அடுத்த பாளையங்கோட்டை பிரிவு அருகே ஆட்டோ வந்துகொண்டிருந்தபோது, திண்டுக்கல்லில் இருந்து குமுளி நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து, எதிர்பாராதவிதமாக ஆட்டோ மீது மோதியது.
இந்த விபத்தில், ராஜலட்சுமி சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார். ஆட்டோ ஓட்டுநரான ஜெயராம், ராமன், மற்றும் கருப்பாயி ஆகியோர் படுகாயமடைந்தனர். அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு, திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
விபத்து குறித்து தகவல் அறிந்த செம்பட்டி போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அரசுப் பேருந்து ஓட்டுநரான திண்டுக்கல்லைச் சேர்ந்த நாராயணசாமி என்பவரை கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்து அப்பகுதியில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
நிர்வாக ஆசிரியர் - பா.விக்னேஷ்பெருமாள்
குரூப் 2, 2ஏ தேர்வு...! நடத்த முடியாத ஆட்சி...! எடப்பாடி கடும் கண்டனம்...!
செய்தியாளர்கள் மீது வழக்குப்பதிவு - எம்எல்ஏ வை கைது செய்யாதது ஏன் ?
போதை தடுப்பு நீதிமன்றத்தில் நான்கு பேருக்கு 12 ஆண்டுகள் கடுங்காவல்....!!!
தேசிய அளவில் முக்கிய பொறுப்பு அண்ணாமலை க்கு.....!!!
தமிழக அரசியலில் அடிமை என்ற சொல் புதிதல்ல....?????