by Vignesh Perumal on | 2025-08-06 08:16 PM
உடுமலை அருகே வெட்டிக் கொல்லப்பட்ட சிறப்பு உதவி ஆய்வாளர் (எஸ்.எஸ்.ஐ.) சண்முகவேலின் உடலுக்கு தமிழக டி.ஜி.பி. சங்கர் ஜிவால் நேரில் அஞ்சலி செலுத்தியதுடன், அவரது உடலை சுமந்து சென்று மரியாதையும் செலுத்தினார்.
திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகே சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்த சண்முகவேல், கடந்த சில தினங்களுக்கு முன்பு வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் தமிழக காவல்துறை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்தக் கொலை தொடர்பாக மூர்த்தி, அவரது மகன் தங்கபாண்டி உள்ளிட்ட இருவர் சரணடைந்துள்ளனர். மற்றொரு மகன் மணிகண்டனை போலீசார் தேடி வருகின்றனர்.
உடுமலையில் வைக்கப்பட்டிருந்த சண்முகவேலின் உடலுக்கு, டி.ஜி.பி. சங்கர் ஜிவால், ஏ.டி.ஜி.பி. டேவிட்சன் தேவாசீர்வாதம், மேற்கு மண்டல ஐ.ஜி. செந்தில்குமார், திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிரிஷ் யாதவ் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
மேலும், காவல்துறை மரியாதை அளிக்கும் விதமாக 30 குண்டுகள் முழங்க இறுதி மரியாதை செலுத்தப்பட்டது. அப்போது, டி.ஜி.பி. சங்கர் ஜிவால், சண்முகவேலின் உடலைச் சுமந்து சென்று ஆம்புலன்ஸில் ஏற்றினார். இந்தச் செயல், காவல்துறையினரின் ஒற்றுமையையும், தியாகத்தையும் உணர்த்துவதாக அமைந்தது.
சண்முகவேல் குடும்பத்தினருக்கு தமிழக அரசு சார்பில் ₹30 லட்சம் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.
நிர்வாக ஆசிரியர் - பா.விக்னேஷ்பெருமாள்
இன்ஸ்பெக்டருக்கு அரிவாள் வெட்டு ! சுட்டுப் பிடித்த போலீஸ் !!
அரசு ஊழியர்களுக்கு ஆப்பு ! த வெ க அரசு அதிரடி !!
ATM மையங்களில் கைவரிசை காட்டிய இளம் பெண் கைது! ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலீஸ் !!
மெகா போக்குவரத்து மாற்றம் - வாகன ஓட்டிகளே உஷார் !!
மனைவியுடன் கள்ளத்தொடர்பு - எச்சரித்த நண்பன் ! கேட்காத ஆத்திரத்தால் 40 வருட நண்பனை வெட்டிக்கொன்ற கொடூரம் !!