| | | | | | | | | | | | | | | | | | |
மாவட்டம் Tamilnadu

திமுக கவுன்சிலர் மாரடைப்பால் காலமானார்...! இன்று பிறந்த நாள்...! பெரும் சோகம்....!

by Vignesh Perumal on | 2025-08-01 07:48 PM

Share:


திமுக கவுன்சிலர் மாரடைப்பால் காலமானார்...! இன்று பிறந்த நாள்...! பெரும் சோகம்....!

உளுந்தூர்பேட்டை நகராட்சியின் 2வது வார்டு திமுக கவுன்சிலர் குமரவேல் இன்று அதிகாலை மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 42.

இன்று அவரது பிறந்தநாள் என்பது குறிப்பிடத்தக்கது. பிறந்தநாள் கொண்டாட்டத்திற்குத் தயாராக இருந்த நிலையில், அவரது திடீர் மறைவு அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கவுன்சிலர் குமரவேல், உளுந்தூர்பேட்டை நகர திமுக வர்த்தக அணி துணை அமைப்பாளராகவும் பதவி வகித்து வந்தார். இவர், கடலூர் மாவட்டம் பண்ருட்டியைச் சேர்ந்தவர். அவருக்கு மனைவி மற்றும் இரு மகள்கள் உள்ளனர்.

மறைந்த குமரவேலுக்கு உளுந்தூர்பேட்டை நகரத் தலைவர் சையது முஜிபூர் ரஹ்மான், நகர்மன்றத் தலைவர் சபியுல்லா மற்றும் நகர திமுக நிர்வாகிகள், கட்சித் தொண்டர்கள் உள்ளிட்ட பலர் அஞ்சலி செலுத்தினர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.






நிர்வாக ஆசிரியர்- பா.விக்னேஷ்பெருமாள்

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment