by Vignesh Perumal on | 2025-07-26 03:01 PM
ராணிப்பேட்டை மாவட்டம் நேத்தப்பாக்கத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர், மூன்று ஆண்டுகளாக ஒருதலைக் காதலால் பின் தொடர்ந்து வந்த கவியரசு என்பவரால் கத்தியால் குத்தப்பட்டார். இந்தக் கொடூரச் சம்பவம் மாணவியின் தந்தை கண் முன்னே நடந்தேறியதுடன், அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நேத்தப்பாக்கத்தைச் சேர்ந்த கவியரசு என்ற இளைஞர், அதே பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவரை கடந்த மூன்று ஆண்டுகளாக ஒருதலைபட்சமாகக் காதலித்து வந்துள்ளார். தனது காதலை ஏற்றுக்கொள்ளுமாறு மாணவியைத் தொடர்ந்து தொந்தரவு செய்து வந்ததாகக் கூறப்படுகிறது.
மாணவி அவரது காதலை ஏற்க மறுத்ததால் ஆத்திரமடைந்த கவியரசு, இன்று மாலை மாணவி கல்லூரி முடிந்து தனது தந்தையுடன் வீட்டிற்குத் திரும்பி வந்து கொண்டிருந்தபோது அவர்களை வழிமறித்துள்ளார். பின்னர், மாணவியின் தந்தை கண் முன்னே, கவியரசு மறைத்து வைத்திருந்த கத்தியால் மாணவியைக் சரமாரியாகக் குத்தியுள்ளார்.
கத்திக்குத்தில் படுகாயமடைந்த மாணவி ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார். உடனடியாக மீட்கப்பட்ட அவர், அருகிலுள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் குறித்துத் தகவலறிந்த ராணிப்பேட்டை போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மாணவியைக் கத்தியால் குத்திய கவியரசுவை உடனடியாகக் கைது செய்து, அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இச்சம்பவம் ராணிப்பேட்டையில் பெரும் பதற்றத்தையும், பெண்களின் பாதுகாப்பு குறித்த கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. ஒருதலைக் காதல் என்ற பெயரில் நிகழும் இதுபோன்ற குற்றச் சம்பவங்களைத் தடுக்கக் காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
நிர்வாக ஆசிரியர்- பா.விக்னேஷ்பெருமாள்.
இன்ஸ்பெக்டருக்கு அரிவாள் வெட்டு ! சுட்டுப் பிடித்த போலீஸ் !!
அரசு ஊழியர்களுக்கு ஆப்பு ! த வெ க அரசு அதிரடி !!
ATM மையங்களில் கைவரிசை காட்டிய இளம் பெண் கைது! ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலீஸ் !!
மெகா போக்குவரத்து மாற்றம் - வாகன ஓட்டிகளே உஷார் !!
மனைவியுடன் கள்ளத்தொடர்பு - எச்சரித்த நண்பன் ! கேட்காத ஆத்திரத்தால் 40 வருட நண்பனை வெட்டிக்கொன்ற கொடூரம் !!